‘விண்ணைத் தாண்டி வருவாயா -2’ உருவாகுமா? - கெளதம் மேனன் சொன்ன பதில் என்ன?

விண்ணைத் தாண்டி வருவாயா பார்ட் 2 வருமா என இயக்குநர் கெளதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 10, 2022, 03:42 PM IST
  • சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு எனும் படத்தை கெளதம் மேனன் இயக்கி வருகிறார்.
  • கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் விண்ணைத் தாண்டி வருவாயா.
  • விண்ணைத் தாண்டி வருவாயா பார்ட் 2 வருமா என கெளதம் மேனன் விளக்கம்.
‘விண்ணைத் தாண்டி வருவாயா -2’ உருவாகுமா? - கெளதம் மேனன் சொன்ன பதில் என்ன? title=

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் விண்ணைத் தாண்டி வருவாயா. 

சிம்பு மற்றும் த்ரிஷா நாயகன் நாயகியாக நடித்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. வித்யாசமான காதல் படமாக அமைந்த இது, சிம்புவின் கரியரிலும் முக்கியமான ஒரு படமாக அமைந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் நல்ல கவனத்தைப் பெற்றன.

படம் வெளியாகி சுமார் 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. ஆனால், காதலர் தினம் உள்ளிட்ட சிறப்பு தினங்கள் என்றால் இன்றும்கூட சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் இப்படம் திரையரங்கில் சிறப்புத் திரையிடலாக ஓடிக் கொண்டிருக்கும். காரணம்- அந்த அளவுக்கு இப்படம் ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது.

                                           

தற்போது சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு எனும் படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி வருகிறார். இப்படத்துக்கும் நல்ல எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட இயக்குநர் கெளதம் மேனனிடம், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் அடுத்த பாகம் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டது.

                                                             

மேலும் படிக்க | வைரலாகும் விஜய்யின் லுக்... இதுதான் கெட்டப்பா?

 

இதற்குப் பதிலளித்த அவர், இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகும் எனவும் அதற்காக பணிகளில் தான் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார். கெளதம் மேனனின் இந்த பதிலால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் இதே கூட்டணியில், செல்போனிலேயே படமாக்கப்பட்ட ‘கார்த்திக் டயல் செய்த எண்’ எனும் குறும்படம் வெளியாகிக் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது! 

மேலும் படிக்க | சிரஞ்சீவியால் மகேஷ்பாபுவுக்கு வந்த ஆபத்து! - கலக்கத்தில் டோலிவுட்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

ChiranjeeviMahesh BabuAcharya

 

Trending News