தன்னை விட 16 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் ‘தெய்வத்திருமகள்’ குழந்தை!

Sara Arjun: தெய்வத்திருமகள் படத்தில் குழந்தையாக நடித்த சாரா அர்ஜுன், தன்னை விட 16 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Nov 10, 2023, 04:30 PM IST
  • தெய்வ திருமகள் படத்தில் நடித்து பிரபலமானவர், சாரா அர்ஜுன்.
  • இவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
  • தன்னை விட 16 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகிறார்.
தன்னை விட 16 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் ‘தெய்வத்திருமகள்’ குழந்தை! title=

2011 ஆம் ஆண்டு வெளியான ‘தெய்வத்திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்து பலரையும் கவர்ந்தவர், சாரா அர்ஜுன். இவர், தற்போது நன்கு வளர்ந்து விட்ட நிலையில், தன்னை விட 16 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தெய்வத்திருமகள்:

சினிமா உலகில் கடின உழைப்புமிக்க நடிகர்களின் பட்டியலில் முதன்மையான இடத்தை பிடித்திருப்பவர், விக்ரம். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருந்த படம் “தெய்வத்திருமகள்”. ஏ.எல்.விஜய் இயக்கியிருந்த இந்த படத்தில் விக்ரமின் 5 வயது மகளாக சாரா அர்ஜுன் நடித்திருப்பார். இந்த படம் மூலமாக இவர் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார். 

சாரா அர்ஜுன்:

தெய்வத்திருமகள் படத்தில் நடித்தற்கு பிறகு, சாரா அதே இயக்குநரின் இயக்கத்தில் வெளிவந்த “சைவம்” படத்திலும் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். தெய்வத்திருமகள் படத்தில் மிகவும் சிரிய குழந்தையாக இருந்த இவர், இந்த படத்தில் கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக காண்பிக்கப்பட்டார். இவர், பிரபல நடிகர் ராஜ் அர்ஜுனின் மகளாவார். இவரது தாயும் பரத நாட்டிய கலைஞர். தந்தை மூலமாக திரையுலகிற்குள் வந்த இவர், தற்போது நன்கு வளர்ந்த பருவ மங்கையாக மாறிவிட்டார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இர்ணடு பாகங்களிலும் இளம் வயது நந்தினியாக நடித்து மீண்டும் ஒருமுறை தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார். 2005ஆம் ஆண்டு பிறந்த சாராவிற்கு தற்போது 18 வயதாகிறது. 

16 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக…

குழந்தை கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகைகள், வளர்ந்த பின்பு நாயகியாக மாறுவது திரையுலகிற்கு ஒன்னும் புதிதல்ல. “அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தில் “ரஜினி அங்கிள்..” என்று அன்போடு அழைத்த மீனா, சில வருடங்களுக்கு பிறகு ‘முத்து’ படத்தில் அதே ரஜினியுடன் டூயட் பாடினார். இது போல இன்னும் சில உதாரணங்கள் திரையுலகில் உள்ளன. அந்த லிஸ்டில் சாரா அர்ஜுனும் சேர உள்ளார். 18 வயது நிரம்பிய சாரா அர்ஜுன், தன்னை விட 16 வயது மூத்த நடகர் ஒருவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. 

மேலும் படிக்க | இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!

இவர்தான் அந்த நடிகர்:

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர், விஜய் தேவரகொண்டா. தமிழ் ரசிகைகள் மத்தியிலும் விஜய் தேவரகொண்டா மிகவும் பிரபலம். முதன்முதலாக விஜய் தேவரகொண்டாவை ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலமாகத்தான் பலரும் அறிந்து கொண்டனர். இவர், தற்போது தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் முக்கிய ஹீரோவாக உள்ளார். 

VJD Sara

விஜய் தேவரகொண்டாவிற்கு தற்போது 34 வயதாகிறது. இவரையும் சாரா அர்ஜுனையும் வைத்து காதல் கதை ஒன்று தயாராகி வருகிறதாம். இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் கெளதம் இயக்குகிறாராம். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் புதிய தகவலாக வெளியாகியுள்ளது. 

ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? 

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த பலர், தற்போது திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கின்றனர். அதே போல, குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டு பின்னர் கதாநாயகியாக நடிப்பவர்களையும் “அந்த குழந்தையா இப்படி வளர்ந்திடுச்சு..” என்று ஆச்சரியமாக சில நாட்கள் பார்ப்பார்கள். அதன் பிறகு, அவர்களை கதாநாயகியாக பார்க்க பார்க்க அவர்களுக்கே பழகி விடும். அஜித்திற்கு ரீல் மகளாக நடித்த அனேகா சுரேந்திரன் வரிசையாக 2-3 படங்களில் ஹீரோயினாக நடித்து விட்டார். அவரை ரசிகர்கள் கதாநாயகியாக ஏற்றுக்கொள்ள சிரமப்பட்டாலும், தற்போது அதற்கு பழகிக்கொண்டனர். அதே போல விஜய் தேவரகொண்டா-சாரா அர்ஜுனுக்கு இடையே உள்ள வயது வித்தியாசத்தையும் மறந்து படத்தை ரசித்து பார்ப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள்X Vs ஜப்பான்: எந்த படம் நல்லாயிருக்கு? எதை முதலில் பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News