இந்திய திரையுலகில் பாலிவுட் Vs தென்னிந்திய படங்கள் என்ற நிலை தற்போது நிலவிவருகிறது. அஜய் தேவ்கன் கிச்சா சுதீப்பிடம் இந்தி குறித்து ட்விட்டரில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர், புஷ்பா போன்ற படங்கள் பான் இந்தியா படமாக வெளியாகி வசூலில் சாதனை படைத்ததை இந்தி திரையுலகினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அஜய் தேவ்கன், நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் தென்னிந்திய சினிமாக்களை அலட்சியமாக கருதுகின்றனர் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையி மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆச்சார்யா பட விழாவில் இந்தி திரையுலகம் குறித்து பல்வேறு விஷயங்களை பேசியிருக்கிறார். விழாவில் பேசிய அவர், “ஒருகாலத்தில் இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமா என்று எண்ணும் அளவுக்கு அந்த மொழி திரைப்படங்கள் ப்ரமோட் செய்யப்பட்டன. மற்ற மாநில மொழி திரைப்படங்கள் நன்றாக எடுக்கப்பட்டிருந்தாலும் தேசிய அளவில் அது என்றைக்கும் பேசப்படாது.
1988ஆம் ஆண்டு வெளிவந்த 'ருத்ரவீணா' திரைப்படத்துக்கு எனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. விருதை வாங்குவதற்காக நானும், படக்குழுவினரும் டெல்லிக்கு சென்றோம். அப்போது விழாவுக்கு முன்பு நடந்த விருந்து நிகழ்ச்சியில், இந்தி சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி, அந்த நிகழ்ச்சியில் இந்திய திரைப்படங்களுக்காக காண்பிக்கப்பட்ட பிரத்யேக காட்சியில் இந்தி திரைப்படங்களின் சீன்களே காட்டப்பட்டன.
தென்னிந்திய திரைப்படங்கள் சார்பில் எம்ஜிஆர் - ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டன. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ், ராஜ்குமார் போன்ற ஏராளமானோர் தென்னிந்தியாவில் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் எங்களுக்கு கடவுள் போன்றவர்கள்.
மேலும் படிக்க | நடிகை மஞ்சு வாரியர் கடத்தலா?! - நடந்தது என்ன? பரபரக்கும் சினிமா உலகம்!
ஆனால், அவர்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு இந்தி நடிகர்கள் மட்டுமே அந்நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். உண்மையிலேயே அந்த நிகழ்ச்சியில் நான் அவமானப்பட்டேன்.
இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற 'பான் இந்தியா' திரைப்படங்கள் தெலுங்கு சினிமாவை பெருமைக்கொள்ள செய்திருக்கின்றன” என்றார்.
மேலும் படிக்க | இணையத்தில் வைரலாகும் அஜித்தின் ‘வெயிட் லாஸ்’ புகைப்படம்! - உள்ளே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR