கடந்த ஏப்ரல் 16-ம் தேதி காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் நடிகர் விவேக் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் மறுநாள் (ஏப்ரல் 17) அதிகாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் (Actor Vivek) காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, உலகமெங்கும் வாழும் தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஒரு குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் நடிகர் விவேக் திகழ்ந்தார். தனது சமூக சேவையின் ஒரு பகுதியாக தனது வாழ்நாளில் 1 கோடி மரக்கன்றுகளை நட்டுவிட வேண்டும் என்ற உயரிய லட்சியத்தை நோக்கி செயல்பட்டார். தனது லட்சிய பயணத்தில், 33.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளார்.
ALSO READ | அரசுக்கும் காவல்துறைக்கும் மிக்க நன்றி: நடிகர் விவேக் குடும்பத்தினர்
இயற்கையை நேசித்த, இயற்கையின் பாதுகாவலராக விளங்கிய நடிகர் விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மத்திய அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், பிரதமர் மோடியிடம் ஆலோசனை செய்ததாகத் தகவலகள் வெளிவருகின்றன.
அதாவது விவேக் படம் போட்ட தபால் தலை (Postage Stamp) விரைவில் வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. அநேகமாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் தபால் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
ALSO READ | விவேக் மரணத்திற்கு இது தான் காரணம்! உண்மைகள் கசிவு!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR