"பாஸ்கர் ஒரு ராஸ்கல்": டீசர் தேதி அறிவிப்பு!!

Last Updated : Sep 26, 2017, 01:04 PM IST
"பாஸ்கர் ஒரு ராஸ்கல்": டீசர் தேதி அறிவிப்பு!! title=

அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’’. இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிகாவும் நடித்து உள்ளார். முக்கிய வேடத்தில் நிகிஷா பட்டேலும் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் மலையாளத்தில் மெகா ஸ்டார் மம்மூட்டி படத்தின் ரீமேக்காகும். அரவிந்த்சாமி சம்மந்தப்பட்ட காட்சிகளை முடித்துள்ளார் இயக்குநர் சித்திக். இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமுள்ளது.

முன்னதாக இப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசரை செப்டம்பர் 29-ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். 

 

 

Trending News