நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் படத் தயாரிப்பாளர் கைது

Police Arrested Film Producer: நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் பேரில் படத் தயாரிப்பாளர் கைது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 30, 2022, 05:56 PM IST
  • நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த படத் தயாரிப்பாளர்
  • புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் கைது
  • பரபரப்பாகும் கைது செய்தி
நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் படத் தயாரிப்பாளர் கைது title=

தனக்குக் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  நடிகை அமலாபால் கொடுத்த புகாரின் பேரில், திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த நடிகை அமலாபால், கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  கடந்த 2018 ஆம் ஆண்டு திரைப்பட தொழிலில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்த பவ்நிந்தர் சிங் தத் என்கின்ற பூவி என்பவருடன் நடிகை அமலாபாலுக்கு நட்பு ஏற்பட்டது. இதையடுத்து, அமலாபால் மற்றும் பவ்நிந்தர் சிங் தத் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அவர் திரைப்படம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, அமலாபாலுடன் சேர்ந்து பவ்நிந்தர் சிங் தத்துடன் இணைந்து வீடு வாடகைக்கு எடுத்து அதில் அலுவலகத்தை நடத்தி வந்துள்ளனர். பூவி என்று பெயரிடப்பட்ட திரைப்பட நிறுவனத்தின் அலுவலகம் கோட்டக்குப்பம் அருகே ஆரோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள பெரிய முதலியார் சாவடியில் திறக்கப்பட்டது.

 மேலும் படிக்க | நூறு வயது தம்பதிக்கு திருமணம்! உறவினர்கள், ஊர்மக்கள் ஆசி பெற்றனர்!
அப்போது அமலாபாலை திருமணம் செய்து கொள்வதாக பவ்நிந்தர் சிங் தத் கூறி பலமுறை அமலாபாலுடன் ஒன்றாக இருந்துவிட்டு, கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துள்ளனர்.

அதன்பின்  நடிகை அமலாபாலிடம் பவ்நிந்தர் சிங் தத் ஒன்றாக இருந்த புகைப்படத்தினை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாகக் கூறி, மிரட்டல் விடுத்தாகவும், பண மோசடி செய்ததாகவும், பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் துன்புறுத்தல் செய்ததாக, அமலாபால் தரப்பில் அவரது மேலாளர் விக்னேஷ், விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் கடந்த 26 ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

மேலும் படிக்க | மேட்டூர் அணையில் நீர் வெளியேறும் அளவு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆகா உயர்வு! 

இப்புகாரின் பேரில், விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார், பவ்நிந்தர் சிங் தத் உள்பட 12 பேர் மீது, 16 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து முதலியார் சாவடியில் இருந்த பவ்நிந்தர் சிங் தத்தை போலீசார் இன்று கைது செய்தனர்.

தலைமறைவான மற்ற 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட பவ்நிந்தர் சிங் தத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அவரை வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க | தங்கையின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணன் - காருக்கு தீ வைத்த பயங்கரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News