UPS Update: 25 ஆண்டுகளுக்கு குறைவாக சர்வீஸ் உள்ளவர்களுக்கு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்?

Unified Pension Scheme: ஏப்ரல் 1, 2025 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவது தொடர்பான அம்சங்கள் மற்றும் விவரங்களை விளக்கும் அறிவிப்பை நிதி அமைச்சகம் ஜனவரி 24ம் தேதி அன்று வெளியிட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 28, 2025, 12:55 PM IST
  • அரசு ஊழியர்கள் திட்டத்தின் கீழ் உள்ள சில விதிகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முயற்சித்து வருகின்றனர்.
  • OPS மறுசீரமைப்பை கோரும் ஊழியர் சங்கங்கள்.
  • மத்திய அரசு ஊழியர்கள் எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார்கள்?
UPS Update: 25 ஆண்டுகளுக்கு குறைவாக சர்வீஸ் உள்ளவர்களுக்கு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்? title=

Unified Pension Scheme: ஏப்ரல் 1, 2025 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவது தொடர்பான அம்சங்கள் மற்றும் விவரங்களை விளக்கும் அறிவிப்பை நிதி அமைச்சகம் ஜனவரி 24ம் தேதி அன்று வெளியிட்டது. தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள ஊழியர்கள் அனைவரும், UPS திட்டத்தில் இணையலாம்.

மத்திய அரசு ஊழியர்கள் திட்டத்தின் கீழ் உள்ள சில விதிகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முயற்சித்து வருகின்றனர். UPS திட்டத்தின் கீழ் உத்திரவாத ஓய்வூதிய தொடங்குவதற்கான காலக்கெடு மற்றும் விருப்பு ஓய்வுக்கான குறைந்தபட்ச சேவை ஆண்டுகள் போன்ற விதிகளுக்கு இன்னும் தெளிவு தேவை. அடுத்த நிதியாண்டில் UPS அமல்படுத்தப்படுவதற்கு முன்பு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என்று ஊழியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

OPS மறுசீரமைப்பை கோரும் ஊழியர் சங்கங்கள்

NPS மற்றும் UPS இடையே ஒரு தேர்வை ஊழியர்களுக்கு வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவில் ஊழியர் சங்கத் தலைவர்கள் இன்னும் திருப்தி அடையவில்லை. OPS  என்னும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான அவர்களின் கோரிக்கையில் அவர்கள் பிடிவாதமாக உள்ளனர். NPS மற்றும் UPS உடன் விஷயங்களை சிக்கலாக்குவதற்கு பதிலாக, அரசாங்கம் நேரடியாக OPS சலுகைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று ஊழியர்கள் கருதுகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்கள் எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார்கள்?

ஒரு ஊழியரின் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக 12 மாதங்களுக்கு சராசரி அடிப்படை சம்பளம் ரூ.50,000 ஆகவும், ஊழியர் 10% மாதாந்திர பங்களிப்புடன் 25 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், மாதாந்திர ஓய்வூதியம் ரூ.25,000 + DR ஆகவும் இருக்கும். ஊழியர் 15 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், ஓய்வூதியம் ரூ.15,000 + DR ஆக இருக்கும். இது 30%  என்ற அளவில் கணக்கிடப்படுகிறது. 10 ஆண்டுகள் மட்டுமே சேவை செய்த ஊழியர்களுக்கு, UPS திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.10,000 + DR ஆக இருக்கும்.

கணக்கீடு செய்யப்படும் ஓய்வூதியத் தொகை சர்வீஸ் ஆண்டுகளை விட இரட்டிப்பாக இருக்கும் என்பதைக் இந்த கணக்கீடு காட்டுகிறது. உதாரணமாக, ரூ.40,000 அடிப்படை சம்பளம் மற்றும் 20 ஆண்டுகள் சேவை அனுபவம் உள்ள ஒரு ஊழியர் 40% ஓய்வூதியத்தைப் பெறுவார். அதாவது ரூ.16,000 + DR.

VRS என்னும் விருப்ப எடுப்பதில் ஏற்படும் இழப்பு

ஒரு ஊழியர் 25 ஆண்டுகள் சேவையை முடிப்பதற்கு முன்பு விருப்ப ஓய்வூதியத் திட்டத்தை (VRS) எடுத்தால், அவர்களுக்கு VRS தேதியிலிருந்து ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காது. அதற்கு பதிலாக, ஊழியர் 60 வயதை எட்டியவுடன் மட்டுமே ஓய்வூதியம் கிடைக்க தொடங்கும். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவைக்குப் பிறகு விருப்ப ஓய்வு பெற்றால், அவரது உண்மையான ஓய்வு பெறும் தேதியிலிருந்து ஓய்வூதியம் தொடங்கும் என அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு மாற்றுத்திறனாளி பென்ஷன், இரட்டை பென்ஷன் குறித்து முக்கிய தகவல்

சுருக்கமாகச் சொன்னால், ஒரு ஊழியர் முன்கூட்டியே ஓய்வு பெறத் தேர்வுசெய்தால் (25 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு), அவர் உடனடியாக உத்திரவாத ஓய்வூதியப் பணத்தைப் பெறத் தொடங்க மாட்டார். அதற்கு பதிலாக, அவர் பணியில் இருந்திருந்தால் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய வயதை அடையும் போது மட்டுமே ஊதியங்கள் தொடங்கும்.

UPS  ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குடும்ப ஓய்வூதிய விதி

இதேபோல், மரணம் ஏற்பட்டால், இறந்த தேதியிலிருந்து குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் கிடைக்காது. அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஊழியர் உயிருடன் இருந்திருந்தால், 60 வயது நிரம்பிய பின்னரே ஓய்வூதியம் வழங்கப்படும்.

VRS என்னும் விருப்பு ஓய்வுக்கான குறைந்தபட்ச சர்வீஸ் தேவை

இந்தப் புதிய திட்டத்தில் எழும் ஒரு முக்கிய கேள்வி என்னவென்றால், மத்திய அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்குத் தேவையான குறைந்தபட்ச சர்வீஸ் தேவை தற்போதைய 20 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறதா என்பதுதான்.

UPS  - பிற முக்கிய அம்சங்கள்

ஆகஸ்ட் 24, 2024 அன்று, மத்திய அமைச்சரவை சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS திட்டத்தை அங்கீகரித்தது. இந்த திட்டத்தின் கீழ், 25 ஆண்டுகள் சேவை முடிந்தால், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் ஒரு மத்திய அரசு ஊழியர் பெறும் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50%க்கு சமமான மாதாந்திர ஓய்வூதியத்தை உறுதியளிக்கிறது.

ஊழியர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து ஓய்வூதிய முறையை மறுசீரமைக்க 2023 ஏப்ரல் மாதத்தில் அப்போதைய நிதிச் செயலாளராக இருந்த டி.வி. சோமநாதன் தலைமையில் மத்திய அரசு ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தது. தொழிற்சங்கங்களும் பிற ஊழியர் அமைப்புகளும் NPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க அரசாங்கத்தின் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் படிக்க | மார்ச் 31 கடைசி தேதி.. முன்னாள் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News