கர்நாடக தேர்தலின் அரியாசனம் காங்கிரஸ்-க்கு தான் -சித்தராமையா!

தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் பான்மையுடன் வெல்லும். பிற கட்சிகளின் ஆதரவுடனோ ஆட்சி அமைக்கும் அவலம் ஏற்படாது என சித்தராமையா தெரிவித்துள்ளார்! 

Last Updated : May 7, 2018, 08:58 AM IST
கர்நாடக தேர்தலின் அரியாசனம் காங்கிரஸ்-க்கு தான் -சித்தராமையா!  title=

கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பலயுக்திகளை கையாண்டு வருகிறது.

தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் அங்கு இரு பெரும் கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக தங்கள் பலத்தை நிரூபிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான பாஜக காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கவும் தீவிரமாக போராடி வருகிறது. 

 இந்நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார் சித்தராமையா. அப்போது அவர் பேசியதாவது....! பிரதமர் பதவியில் இருப்பவரிடமிருந்து கவுரவமான வார்த்தையை எதிர்பார்ப்பதாகவும், பிரதமர் பாஜக மொழியில் தனிநபரை விமர்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி சிறப்பாக நடந்துள்ளது. கடந்த தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பேசிய அவர், கர்நாடக முதலமைச்சரின் பெயரை மாற்றி பேசியதற்கு பதிலளித்த அவர் பிரதமர் தனது அரசின் சாதனைகளையும் கர்நாடக அரசின் தவறுகளையும் விமர்சித்து பேசலாம். ஆனால், தனிநபரை விமர்சித்து பேசுவது சரியல்ல என்று தெரிவித்துள்ளார். 

 

Trending News