BHEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

BHEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 30, 2022, 11:59 AM IST
  • BHEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
  • பல்வேறு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
 BHEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம் title=

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) பொது நிறுவனங்களின் தேர்வு வாரியத்தின் கீழ் Director (Industrial Systems & Products) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் Director (Industrial Systems & Products) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Director கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்/நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45க்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

Director (Industrial Systems & Products) – ரூ.1,80,000 முதல் 3,40,000வரை ஆண்டு வருமானமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

விண்ணப்பிக்கும் முறை:

https://pesb.gov.in/Home/Index என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்ற வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்

மேலும் படிக்க | டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலை வாய்ப்பு... முழு விவரம்

மேலும் படிக்க | Aadhaar Card பயனர்கள் இதை மட்டும் செய்யாதீர்கள், பிறகு அவதிதான்: எச்சரிக்கும் UIDAI

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News