ஆதார் அட்டையை நினைத்து பயமா? பாதுகாப்பாக பயன்படுத்த எளிய வழிகள்

Aadhar Safety Tips : தனது ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்க எளிய வழிமுறைகளையும், அறிவுரைகளையும் UIDAI வழங்கியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 31, 2022, 06:40 AM IST
  • ஆதார் அட்டை இந்திய குடிமகனின் டிஜிட்டல் ஐடி.
  • ஆதார் அட்டையை அலட்சியப்படுத்த வேண்டாம்.
ஆதார் அட்டையை நினைத்து பயமா? பாதுகாப்பாக பயன்படுத்த எளிய வழிகள் title=

மக்கள் தங்களுக்கு ஏற்ற வசதிகள் மற்றும் சேவைகளைப் பெற ஆதாரை நம்பிக்கையுடன் பயன்படுத்துமாறு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் வங்கிக் கணக்கு, பான் அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட பிற அடையாள ஆவணங்களில் பயன்படுத்துவதை போன்று ஆதாரையும் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 

ஆதார் கடிதம் / ஆதார் பிளாஸ்டிக் (PVC) அட்டை அல்லது அதன் நகலை கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம் என்று மக்களுக்கு ஆதார் அடையாள அட்டையை வழங்கும் அமைப்பான UIDAI வலியுறுத்துகிறது. பொது வெளியில் குறிப்பாக சமூக ஊடகங்கள் மற்றும் பிற பொது தளங்களில் ஆதாரை வெளிப்படையாகப் பகிர வேண்டாம் என்று மக்களை அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது மத்திய அரசு!

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் OTP-ஐ யாருக்கும் அல்லது எந்தவொரு நிறுவனத்திற்கும் வெளியிடக்கூடாது. மொபைலில் ஆதார் பாதுகாப்பு எண்ணான m-Aadhaar PIN உள்ளிட்டவற்றையும் பிறருடன் பகிர்வதை தவிர்க்கவும்.

ஆதார் என்பது இந்திய குடிமகனின் டிஜிட்டல் ஐடி. மேலும், இது நாடு முழுவதும் வசிப்பவர்களுக்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் அடையாள சரிபார்ப்புக்கான ஒரே ஆதாரமாக செயல்படுகிறது.

இதுகுறித்து UIDAI வெளியிட்ட அறிக்கையில்,"எந்தவொரு நம்பகமான நிறுவனத்துடனும் ஆதாரைப் பகிரும்போது, மொபைல் எண், வங்கிக் கணக்கு எண், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, பான் அட்டை, ரேஷன் கார்டு போன்ற வேறு எந்த அடையாள ஆவணத்தையும் பகிரும்போது இருக்கும் அதே அளவு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது. 

ஒரு குடிமகன் தனது ஆதார் எண்ணைப் பகிர விரும்பாத இடங்களில், UIDAI ஒரு மெய்நிகர் அடையாளங்காட்டியை உருவாக்கும் வசதியை வழங்குகிறது. ஆதாரை லாக் செய்தல் மற்றும் பயோமெட்ரிக் லாக்கிங் வசதியையும் UIDAI வழங்குகிறது.

மேலும் படிக்க | EPFO ஓய்வூதிய விதிகளில் மாற்றம்: 6 கோடி பேருக்கு நேரடி நன்மை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News