இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 15, 2022, 01:03 PM IST
  • இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்ப்
  • விண்ணப்பிக்க 19ஆம் தேதி கடைசி நாள்
இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு - முழு விவரம் title=

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி (Indian Bank)யின் சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள Chief Risk Officer (CRO) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் indianbank.in என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் சென்று ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | இந்திய விமான துறையில் 70,000 சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்

காலி பணியிட விவரம்:

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் தலைமை இடர் அதிகாரி (CRO) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.07. 2022தேதியின் படி, குறைந்தபட்சம் 40 வயது முதல் அதிகபட்சம் 57 வயதுக்குள் இருக்க வேண்டும். 

கல்வி தகுதி:

பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் தகுதி உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

CRO தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கண்ட வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அவர்களின் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் படிக்க | UPI Fraud Alert: கேஷ்பேக் என்ற தூண்டிலில் மாட்டி பணத்தை இழக்காதீர்கள்

விண்ணப்பக் கட்டணம்:

வங்கி துறையில் பணிபுரிய வேண்டும் என காத்திருக்கும் நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க ரூ.1000 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு 19.07.2022 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உரிய தேதிக்குப் பிறகு பெறப்படும் எந்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager (CDO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014.

மேலும் படிக்க | ஐடிஆர் தாக்கல் முக்கிய அம்சங்கள்: எந்த படிவம் யாருக்கு? கடைசி தேதி என்ன? முழு விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News