உடனடியாக புதிய ரேஷன் கார்டு வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்

அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற உதவும் ரேசன் கார்டை தொலைத்துவிட்டீர்களா? கவலை வேண்டாம். மீண்டும் எளிமையாக ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 7, 2023, 02:26 PM IST
  • தொலைந்த ரேஷன் அட்டை பற்றி பதிவு செய்வது எப்படி?
  • புதிய ரேஷன் கார்டுக்கு எப்படி அப்ளை செய்வது?
  • முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு உள்ளது.
உடனடியாக புதிய ரேஷன் கார்டு வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும் title=

இன்றைய காலகட்டத்தில் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு உள்ளது. இதன் மூலம் உங்களின் பல அரசுப் பணிகள் எளிதாக செய்துக்கொள்ள முடியும். அத்தகைய சூழ்நிலையில், ஒருவரது ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால், அவர் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆனால் இனி கவலைப்பட தேவையில்லை. இன்று, இந்தக் கட்டுரையில், ரேஷன் கார்டு தொலைந்து போனால், வீட்டிலேயே அமர்ந்து புதிய ரேஷன் கார்டை எவ்வாறு பெறுவது என்பதை தெரிந்துக்கொள்வோம். இதற்கு, ரேஷன் கார்டு எண், ஆதார் அட்டை, குடும்பத் தலைவரின் புகைப்படம் ஆகியவை தேவைப்படும். எனவே அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

தொலைந்த ரேஷன் அட்டை பற்றி பதிவு செய்வது எப்படி?

* முதலில் https://www.tnpds.gov.in/ என்ற தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். இங்கு தான் நீங்கள் தொலைந்த ரேஷன் அட்டை பற்றி பதிவு செய்ய முடியும்.

* இந்த லிங்க் ஓபன் ஆனதும் உங்கள் பயனாளர் IDஐ உள்ளிட வேண்டும்.

* இதன் பிறகு பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு OTP எண் ஒன்று வரும்.

* அதை ஸ்கிரீனில் பதிவு செய்து சுயவிவர பக்கத்திற்கு உள்நுழைய வேண்டும்.

* இப்போது TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கத்தை காண்பீர்கள்.

* இதில் கேட்கப்படும் விவரங்களை படிவு செய்து, அந்த காப்பியை PDF ஆக சேமிக்க வேண்டும்.அல்லது டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

* இந்த காப்பியை பிரிண்ட் போட்டு, உங்கள் ரேஷன் அட்டைக்கு உட்பட்ட பகுதிக்கு இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால், உங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இதற்கு சில நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | இன்னமும் ITR தாக்கல் செய்யவில்லையா? கவலை வேண்டாம்... இல்லை அபராதம்: அரசு அளித்த பரிசு!!

இதுத் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800 425 5901 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

புதிய ரேஷன் கார்டுக்கு எப்படி அப்ளை செய்வது?

*முதலில் https://www.tnpds.gov.in/இந்த லிங்குக்குள் செல்ல வேண்டும்.

2. திரையில் இருக்கும் மின்னணு அட்டை சேவைகள் பிரிவில் உள்ள ‘புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.

3. அப்போது இருப்பிடம் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படும். அதை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

4. பின்னர் குடும்பத் தலைவரின் படத்தை பதிவேற்றி, Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

5. இந்த படிகள் முடிந்த பிறகு ஒரு Reference Number வழங்கப்படும்.

அதனைக்கொண்டு நீங்கள் அப்ளே செய்த புதிய அட்டையின் நிலையை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

ஆன்லைன் ரேஷன் கார்டை பெற சில முக்கியமான ஆவணங்கள் தேவை. இதற்கு ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும். மேலும், உங்கள் வீட்டு முகவரிக்கான சான்றாக மின்சாரம் அல்லது தண்ணீர் ரசீது எடுத்துக் கொள்ளலாம். ரேஷன் கார்டு பெற, வருமானச் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | இன்கம் டேக்ஸ் ரீப்ஃண்ட் முக்கிய அப்டேட்: இதை செய்யவில்லை என்றால் ரீஃபண்ட் கிடைக்காது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News