LIC பாலிசி விவரங்களை உங்கள் மொபைலில் பெற இந்த சின்ன வேலைய செஞ்சா போதும்

இந்த செயல்முறை மிகவும் எளிதானது. இதை பூர்த்தி செய்து, நீங்களும் LIC-யுடன் இணைந்து உங்கள் மொபைலில் தேவையான அனைத்து விழிப்பூட்டல்களையும் பெறலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 10, 2020, 06:40 PM IST
  • LIC வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.
  • இனி, மொபைலில் உங்கள் பாலிசி பிரீமியம் தொடர்பான தகவல்களைப் பெறலாம்.
  • LIC ஒரு ட்வீட் மூலம் இது பற்றிய தகவல்களை அளித்தது.
LIC பாலிசி விவரங்களை உங்கள் மொபைலில் பெற இந்த சின்ன வேலைய செஞ்சா போதும் title=

நீங்கள் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் வாடிக்கையாளராக இருந்தால், மொபைலில் உங்கள் பாலிசி பிரீமியம் தொடர்பான தகவல்களைப் பற்றிய விழிப்பூட்டல்களைப் பெறலாம். நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் தொடர்பு விவரங்களை LIC-யுடன் பதிவு செய்ய வேண்டியது மட்டும்தான்.

LIC, புதன்கிழமையன்று ஒரு ட்வீட்டில் இந்த விவரங்களை தெரியப்படுத்தியுள்ளது. LIC-யுடன் தங்கள் தொடர்பு விவரங்களை பதிவு செய்வதற்கான முழு செயல்முறையையும் தனது வாடிக்கையாளர்களுக்கு LIC விளக்கியுள்ளது. LIC தனது ட்வீட்டில் ஒரு ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அதில் இந்த முழு செயல்முறையும் காட்டப்பட்டுள்ளது.

இந்த செயல்முறை மிகவும் எளிதானது. இதை பூர்த்தி செய்து, நீங்களும் LIC-யுடன் இணைந்து உங்கள் மொபைலில் தேவையான அனைத்து விழிப்பூட்டல்களையும் பெறலாம்.

LIC உடன் தொடர்பு விவரங்களை எவ்வாறு பதிவு செய்வது:

-LIC-யின் வலைத்தளமான www.licindia.in க்குச் செல்லவும்.

-முகப்புப் பக்கத்தின் மேலே 'Customer Services’ என்ற பெயரில் ஒரு பொத்தான் தோன்றும். அதில் ஸ்க்ரோல் டௌன் செய்யவும்.

-இப்போது பட்டியலிலிருந்து 'Update your contact details –online’ –ல் கிளிக் செய்யவும்.

-இதற்குப் பிறகு நீங்கள் ஒரு புதிய பக்கத்தை அடைவீர்கள். இங்கே 'Update your contact details’ லிங்கில் கிளிக் செய்யவும்.

-திரையில் திறந்திருக்கும் புதிய பக்கத்தில் உங்கள் விவரங்களை உள்ளிட்டு, தொடர்பு விவரங்களை சரிபார்த்து, டிக்லெரேஷன் பாக்சில் ‘submit’-ல் கிளிக் செய்யவும்.

-இப்போது நீங்கள் உங்கள் பாலிசி எண்ணை உள்ளிட வேண்டும்.

-அடுத்தது ‘validate policy details’-ல் கிளிக் செய்து பாலிசி நம்பரை வேலிடேட் செய்யவும்.

-இந்த வழியில் உங்கள் தொடர்பு விவரங்கள் வெற்றிகரமாக புதுப்பிக்கப்படும்.

-இதற்குப் பிறகு, உங்கள் பாலிசி பிரீமியத்தை (Policy Premium) சில கிளிக்குகளின் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.

ALSO READ: Indian Oil Carnival offer: SUV, கார், பைக் மற்றும் பல பரிசுகளை வெல்ல ஒரு அரிய வாய்ப்பு

ALSO READ: Whatsapp Carts: இந்த புதிய அம்சத்தின் மூலம் எப்படி ஷாப்பிங் செய்வது என்று உங்களுக்குத் தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News