Eggs Benefits in Tamil: பொதுவாக உணவில் முட்டையை சேர்த்து கொள்வது அதிக நன்மை தருகிறது. முட்டையில் அதிக அளவு வைட்டமின் பி நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின் பி12, பயோட்டின், ரிபோஃப்ளேவின், செலினியம் போன்ற பல சத்துக்கள் உள்ளது. தினசரி முட்டை சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி தொடங்கி, தோல் ஆரோக்கியம், எலும்பு ஆரோக்கியம் என பலவற்றிற்கு உதவுகிறது. முட்டையில் உள்ள இந்த அத்தியாவசிய சத்துக்கள் நமது உடலை ஆரோக்கியமாகவும், வலுவாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் இவை எளிதாக கிடைப்பதால் அனைவரும் சாப்பிட கூடிய உணவாக உள்ளது. காலையில் முட்டைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.
உங்கள் உடலை பிட்டாக வைத்து கொள்ள நினைப்பவர்கள், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டவர்கள் தினசரி உணவில் முட்டைகளை கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும். முட்டையில் உள்ள புரதம் தசைகளின் வலிமைக்கு அதிகம் உதவுகிறது. மேலும் முட்டையில் நிறைய வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. பலர் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதில்லை. அவற்றில் நிறைய புரோட்டீன்கள் உள்ளது. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் முட்டையில் செலினியம், வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் பி12 உள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு புரதம் உள்ளது. இது தசைகளை வலுவாக்கவும், வலிகளை குறைக்கவும் உதவுகிறது. முட்டையில் உள்ள லுடீன் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தி, நினைவாற்றலை கூர்மைப்படுத்துகிறது. அதே போல எலும்புகளை வலுப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. தினசரி காலை உணவில் முட்டைகளை சேர்த்து வந்தால் நல்ல பார்வைக்கு உதவுகிறது. மேலும் முட்டைகள் இதயம் தொடர்பான நோய்களை குறைத்து, மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முட்டைகளை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான விதத்தில் உடல் எடை குறையும். முட்டை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிறைவுற்றதாக இருக்கும். எனவே அதிக உணவுகள் சாப்பிடுவது தடுக்கப்படும்.
முட்டைகள் உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க செய்கின்றன. இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. தொடர்ந்து 6 வாரங்களுக்கு தினமும் இரண்டு முட்டைகளை சாப்பிட்டு வந்தால் HDL அளவை 10 சதவிகிதம் அதிகரிக்க வழிவகுக்கும். முட்டையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கும் திறன் பெற்றவை. மீன், நட்ஸ் போன்ற உயர்தர உணவுகளில் கிடைக்கும் சத்துக்கள் முட்டை சாப்பிடுவதன் மூலமும் கிடைக்கின்றன.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் சேரும் நச்சுக்களை செலவில்லாமல் நீக்கும் சூப்பர் ட்ரிங்க்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ