வாட்ஸ்அப் என்ற சேட்டிங் தளம் உலகெங்கிலும் உள்ள மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாகும். இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் லட்சத்தில் உள்ளது. வாட்ஸ்அப் உள்ள பல அம்சங்கள் காரணமாக, வாழ்க்கை மிகவும் எளிதாகிவிட்டது. இருப்பினும், வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் போது எச்சரிக்கை தேவை. நீங்கள் செய்யும் சில தவறுகளால், உங்கள் தனிப்பட்ட விவரங்கள் கசியக்க்கூடும் என்பதை தவிர, நீங்கள் சிறைக்கு செல்லும் ஆபத்தும் உண்டு.
ப்ரொபைல் புகைப்படத்தைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்
உங்கள் ப்ரொபைல் புகைப்படத்தை வைக்கும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் இருப்பிடம் அல்லது வேறு எந்த தகவலையும் வெளிப்படுத்தும் புகைப்படங்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களின் கார் அல்லது பைக்கின் முன் நின்று கொண்டு அதன் நம்பர் பிளேட்டைக் காட்டும் புகைப்படத்தை வைகக்கூடாது. இது தவிர, ப்ரொபைல் புகைப்படத்தைப் பயன்படுத்தும்போது, நீங்கள் செட்டிங்கிற்கு சென்று மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதன் மூலம், இதன் மூலம் அனைவரும் உங்கள் புகைப்படத்தை பார்ப்பதை தவிர்க்கலாம்.
வாட்ஸ்அப்பின் ஆட்டோ பேக் அப் அம்சத்தை பயன்படுத்த வேண்டாம்
வாட்ஸ்அப்பின் Auto-Back Up பலரின் தொலைபேசிகளில் உள்ளது. இதன் மூலம், உங்கள் தகவல்கள், Google Drive அல்லது iCloud இல் சேமிக்கப்படுகிறது. இந்நிலையில், யாராவது உங்கள் கூகிள் அல்லது ஆப்பிள் கணக்கை ஹேக் செய்தால், உங்கள் சேட்டிங் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறலாம். இந்த சிக்கலைத் தவிர்க்க, எப்போதும் சேட் தகவல்களை எக்ஸ்போர்ட் செய்து சேமிக்கவும்.
ALSO READ | Facebook வழங்கும் அசத்தல் அம்சம்; பதிவுகளை வேறு தளங்களுக்கு எளிதாக மாற்றலாம்
தெரியாத எண்களைச் சேமிக்காதீர்கள்
பெரும்பாலும் நமக்கு பரிச்சயமில்லாதவர்களின் தொலைபேசி எண்ணிக்கை சேமிக்கும்போது, அதாவது கேப் டிரைவர், டெலிவரி பாய் அல்லது போன்றவர்கள் எண்களை சில சமயங்களில் நாம் சேமித்து வைக்கிறோம். ஆனால், அதனை நீக்க மறந்து விடுகிறோம். இதன் மூலம், இந்த நபர்கள் உங்கள் வாட்ஸ்அப் ப்ரொபைல் படத்தை நிலைக்குக் காணலாம். இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை யார் வேண்டுமானாலும் தவறாகப் பயன்படுத்தலாம். எனவே, உங்கள் தொலைபேசியில் தெரியாத நபர்களின் தொலைபேசி எண்களை சேமிப்பதற்கு பதிலாக, அதை குறிப்பாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோக்களைப் பகிர வேண்டாம்
வாட்ஸ்அப்பில் சில ஆபாச உள்ளடக்கங்களைப் பகிர்ந்து கொண்டால், உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். உங்கள் வாட்ஸ்அப் கணக்கும் தடைசெய்யப்படலாம். ஆம், யாராவது உங்கள் கணக்கைப் புகாரளித்தாலோ அல்லது போலீஸில் புகாரைப் பதிவு செய்தாலோ, நீங்கள் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். எனவே வாட்ஸ்அப்பில் உள்ளடக்கத்தை கவனமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
Two-step verification அம்சத்தை செயல்படுத்தவும்
வாட்ஸ்அப்பில் இரண்டு-படி Two-step verification செயல்படுத்த வேண்டும். இது வாட்ஸ்அப்பின் முக்கியமான அம்சமாகும். இதில், நீங்கள் 6 இலக்க PIN ஐ அமைக்க வேண்டும். நீங்கள் வேறொரு சாதனத்தில் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும்போது, உங்களுக்கு இந்த பின் தேவைப்படும். சைபர் மோசடியைத் தவிர்க்க, வாட்ஸ்அப்பின் Two-step verification அம்சம் மிகவும் முக்கியமானது.
இது போன்ற செய்திகளை அனுப்புவதைத் தவிர்க்கவும்
வாட்ஸ்அப்பில் வரும், எந்தவொரு செய்தியையும் வீடியோவையும் அனுப்புவதற்கு முன் நீங்கள் அதனை சரிபார்க்க வேண்டும். இப்போதெல்லாம், போலி செய்திகள், இலவச சலுகைகள் மற்றும் அரசாங்க திட்டங்கள் என்ற பெயரில் பல போலி தகவல்கள் அனுப்பப்படுகின்றன. நீங்கள் அவற்றை அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். எந்தவொரு மதத்திற்கும் அல்லது சமூகத்திற்கும் எதிராக வெறுக்கத்தக்க பேச்சு செய்திகள் அல்லது வீடியோக்களைப் பகிர்வதைத் தவிர்ப்பதும் மிக முக்கியம்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பயன்படுத்தும்போது கவனம் தேவை
உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால், தெரியாத நபர்கள் உங்கள் தனிப்பட்ட தகவலை பெறலாம்.
ALSO READ | உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR