Watch: ஜீப்பைக் கழுவ தோனிக்கு உதவும் மகள் ஷிவா தோனி..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மகள் ஷிவாவுடன் இணைந்து ஜீப்பைக் கழுவும் வீடியோ வைரல்..!

Last Updated : Oct 25, 2019, 01:41 PM IST
Watch: ஜீப்பைக் கழுவ தோனிக்கு உதவும் மகள் ஷிவா தோனி..! title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மகள் ஷிவாவுடன் இணைந்து ஜீப்பைக் கழுவும் வீடியோ வைரல்..!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி தன் மகள் ஷிவாவுடன் செலவிடும் பல இனிமையான சம்பவங்களை தனது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், காரை சுத்தம் செய்யும் காட்சி ஒன்றினை இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பைக் மற்றும் கார்களின் மீது அதீத காதல் கொண்ட தோனி இந்திய ராணுவத்திற்காக மட்டுமே தயாரிக்கப்படும் நிசான் ஜோங்கா எஸ்.யூ.வி ஜீப்பை பஞ்சாபில் இருந்து சமீபத்தில் வாங்கினார். புதிதாக வாங்கிய அந்த ஜீப்பை தந்தை தோனி சுத்தம் செய்ய, மகள் ஷிவாவும் கவனமுடன் காரை சுத்தம் செய்கிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட தோனி, இந்த சிறிய உதவி போதும் பெரிய ஜீப் நீண்ட தூரம் பயணிக்கும் என பாசமாக பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. தந்தை மகள் இருவரும் தீபாவளிக்காக காரை சுத்தம் செய்கின்றனர். தோனி பேண்டினை சுருட்டி வைத்து பெரிய கார் ஒன்றினை கழுவுகிறார். உடன் ஷிவாவும் இருப்பதை பார்க்க முடிகிறது. தோனி “பெரிய வாகனத்தைக் கழுவ சிறிய உதவி எப்போதும் நீண்ட தூரம் செல்ல உதவும்” என்று எழுதி பதிவிட்டுள்ளார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

A little help always goes a long way specially when u realise it’s a big vehicle

A post shared by M S Dhoni (@mahi7781) on

வீடியோ வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் 7 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலானோர் “தயவு செய்து எனக்கு உதவ வர முடியுமா” என்று கேட்டுள்ளனர்.  

 

Trending News