ஏழாவது ஊதியக்குழு புதுப்பிப்பு: ஹோலி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கக்கூடும். ஊழியர்களின் 18 மாத அரியர் தொகை குறித்த எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனினும் இந்த விவகாரம் குறித்து ஹோலி பண்டிகையின் போது கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 மாத அகவிலைப்படி அரியர் தொகைக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு பணம் வரும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி
7வது ஊதியக்குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படியைத் தவிர கூடுதலாக பல நன்மைகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், டிஏ முடக்கப்பட்ட காலத்திற்கான அரியர் தொகை பற்றிய விவகாரம் இன்னும் நிலுவையில் உள்ளது.
கூட்டு ஆலோசனை மெஷினரியின் தேசிய கவுன்சில் (ஜேசிஎம்) செயலாளர் (பணியாளர் தரப்பு) சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், டிஏ முடக்கம் நீக்கப்பட்டதுடன், அந்த காலத்திற்கான டிஏ அரியரும் ஒரே தொகையாக அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கவுன்சில் அரசாங்கத்தின் முன் வைத்துள்ளது என்றார்.
ஜே.சி.எம்., பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) தேசிய கவுன்சில் மற்றும் நிதி அமைச்சருக்கு இடையே அரியர் தொகை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இதில் உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் ஊழியர்களின் கோரிக்கை இன்னும் உறுதியாக உள்ளது. இதற்காக அரசுடன் பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது. எவ்வாறாயினும், விரைவில் இது குறித்து அமைச்சரவை செயலாளருடன் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவினத் துறையின் ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் மொத்தம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர்.
2 லட்சத்துக்கும் மேல் அரியர் பாக்கி கிடைக்கும்
முன்னதாக, ஜெசிஎம்-இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவின் கூற்றுபடி, லெவல்-1 ஊழியர்களின் அகவிலைப்படி அரியர் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும். அதேசமயம், லெவல்-13 (7வது CPC அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900) அல்லது நிலை-14 (ஊதிய அளவு) ஊழியர்களின் அகவிலைப்படி அரியர் தொகை, ரூ.1,44,200-2,18,200 ஆக இருக்கும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் ஊதிய உயர்வு நிச்சயம், விரைவில் அறிவிப்பு
டிஏ அரியர் எவ்வளவு கிடைக்கும்?
- குறைந்தபட்ச கிரேட் பே ரூ. 1800 (லெவல்-1 அடிப்படை ஊதிய அளவு ரூ.18000 முதல் ரூ.56900 வரை) உள்ள மத்திய ஊழியர்கள் ரூ. 4320 [{18000 இல் 4 சதவீதம்} X 6]-க்காக காத்திருக்கின்றனர்.
- [{ரூ.56900-ன் 4 சதவீதம்}X6] என்ற கணக்கீட்டில் இருக்கும் ஊழியர்கள் ரூ. 13,656 என்ற தொகைக்கு காத்திருக்கிறார்கள்.
- 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச கிரேட் பேவில் 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை ரூ. 3,240 [{18,000-ன் 3 சத்வீத}x6] என்ற அளவில் அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பெறுவார்கள்.
- [{ரூ. 56,9003-ன் 3 சதவீதம்}x6] என்ற கணக்கீட்டில் உள்ளவர்களுக்கு ரூ.10,242 கிடைக்கும்.
- ஜனவரி மற்றும் ஜூலை 2021 க்கு இடைப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையைக் கணக்கிட்டால், அது 4,320 [{ரூ. 18,000-ன் 4 சதவீதம்}x6] ஆக இருக்கும்.
- [{₹56,900-ன் 4 சதவீதம்}x6] என்ற கணக்கீட்டுக்கு தொகை ரூ.13,656 ஆக இருக்கும்.
பிரதமர் மோடி அரியர் குறித்து முடிவு செய்வார்
18 மாத நிலுவைத் தொகை குறித்த விவகாரம் பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இதைப் பற்றிய முடிவை பிரதமர் மோடி எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பு, நிலுவைத் தொகை குறித்த மத்திய ஊழியர்களின் நம்பிக்கையை மீண்டும் அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடி 18 மாத அகவிலைப்படி அரியர் தொகைக்கு ஒப்புதல் அளித்தால், சுமார் 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் பெரிய தொகை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 7வது சம்பள கமிஷன்: இந்த மாநில ஊழியர்களுக்கு பம்பர், 3% டிஏ உயர்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR