ஜகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு புகார்.....
நேற்று காலை விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்தார். அப்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக சுப்பிரமணி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விமான நிலைய CCTV காட்சிகளின் உதவியோடு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவத்திற்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் மோடி தலைமையிலான மத்திய அரசு உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். தமது அரசு சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதியளித்தார். காயம் அடைந்த ஜெகன் மோகன்ரெட்டி இத்தாக்குதல் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும் நாயுடு வலியுறுத்தினார்.
இதனிடையே தெலுங்கானா காபந்து முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெகன்மோகன் ரெட்டியிடம் அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்தார். ஜெகன் மோகனை கத்தியால் குத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.