உத்தரகாண்ட்: சாமோலி மாவட்டத்தில் சீனா திடீர் ஆக்கிரமிப்பு

Last Updated : Jul 27, 2016, 03:26 PM IST
உத்தரகாண்ட்: சாமோலி மாவட்டத்தில் சீனா திடீர் ஆக்கிரமிப்பு title=

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் சீனா திடீர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது என்பதை அம்மாநில முதல்-மந்திரி ஹரிஷ் ராவத் உறுதிசெய்தார். 

செய்தியாளர்களிடம் பேசிய ஹரிஷ் ராவத் கூறியதாவது:- இதுதொடர்பான செய்திகள் உண்மையானது. நம்முடைய எல்லைப் பகுதியானது இப்போது வரையில் அமைதியாக உள்ளது. முதலில் இருந்தே நாங்கள் கண்காணிப்பை அதிகரிக்க கேட்டுக் கொண்டோம் என்றும், உத்தரகாண்ட் மாநில வருவாய்துறை அதிகாரிகள் நிலத்தை அளவிட சென்றபோது சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பை பார்த்து உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். மத்திய அரசு இதில் கவனம் செலுத்தும் என்றும் ஹரிஷ் ராவத் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். 

இதுதொடர்பாக அறிக்கையை ஒன்றை இந்தோ - திபெத்திய எல்லை பாதுகாப்பு படை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளது,

மத்திய அமைச்சர் கூறும் போது:- இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியானது இதுவரையில் வரையறை செய்யப்படவில்லை, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை வரையறை செய்ய நாங்கள் விரும்புகிறோம், ஆனால் சீனா ஒத்துழைப்பு அழிப்பது கிடையாது என்று கூறியுள்ளார்.

Trending News