நியூடெல்லி: இந்தியாவின் உயர்கல்வி ஆணையமான பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) போலியான பல்கலைக் கழகங்களின் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் பெற்ற பட்டங்கள் அல்லது டிப்ளோமாக்கள் இந்தியாவிற்குள்ளோ அல்லது வெளிநாடுகளிலோ செல்லாது என்ற அறிவிப்பு பலரை திடுக்கிட செய்திருக்கிறது.
பல்கலைக்கழக மானியக் குழு, புதுப்பிக்கப்பட்ட "அங்கீகாரம் பெறாத" பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது, இதனைப் பார்த்து, கல்லூரியில் சேரும் மாணவர்கள், எச்சரிக்கையாக இருக்கலாம், போலி பல்கலைக்கழகங்களில் சேர்ந்து தங்கள் எதிர்காலத்தை தொலைக்க வேண்டாம் என இந்த அறிவுறுத்தல் கூறுகிறது.
இந்த கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு எதிராக உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் யூஜிசி எச்சரித்துள்ளது. "தற்போது 23, அங்கீகாரம் பெறாத நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் UGC சட்டத்திற்கு முரணாக செயல்பட்டு வருவதாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் ரஜ்னிஷ் ஜெயின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆண்டு (2023-24) புதிய கல்வி அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக, UGC வெளியிட்ட போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலில் மொத்தம் 20 பல்கலைக்கழகங்கள் உள்ளன. பெரும்பாலான போலி பல்கலைக்கழகங்கள் டெல்லியில் உள்ளன என்பது அதிர்ச்சியளிக்கிறது.
மேலும் படிக்க | சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் முதுகலை பட்டம் வழங்கும் பல்கலைக்கழகம்!
"UGC சட்டத்தின் விதிகளுக்கு மாறாக பல நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவது UGC-யின் கவனத்திற்கு வந்துள்ளது. அத்தகைய பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்படவோ செல்லுபடியாகவோ இல்லை. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை" என்று யுஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் போலி பல்கலைக்கழகங்கள்
UGC இன் படி டெல்லியில் உள்ள "போலி" பல்கலைக்கழகங்கள்: அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம்; கமர்ஷியல் யுனிவர்சிட்டி லிமிடெட், தர்யாகஞ்ச்; ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம்; தொழிற்கல்வி பல்கலைக்கழகம்; ADR-சென்ட்ரிக் ஜூரிடிகல் பல்கலைக்கழகம்; இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம்; சுயவேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம்; மற்றும் அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (Spiritual University).
உத்தரபிரதேசத்தில் போலி பல்கலைக்கழகங்கள்
வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று யூஜிசி அம்பலப்படுத்தியுள்ளது. காந்தி ஹிந்தி வித்யாபீடம்; எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி தேசிய பல்கலைக்கழகம்; நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பல்கலைக்கழகம் (Open university); மற்றும் பாரதிய சிக்ஷா பரிஷத்.
மேலும் படிக்க | லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்ய கட்டுபாடுகள்!
மேற்கு வங்கத்தில் போலி பல்கலைக்கழகங்கள்
கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் இதுபோன்ற இரண்டு போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்திய மாற்று மருத்துவ நிறுவனம், கொல்கத்தா மற்றும் மாற்று மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தாகுர்புர்கூர்.
ஆந்திராவில் போலி பல்கலைக்கழகங்கள்
தென்னிந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், கிறிஸ்ட் நியூ டெஸ்டமென்ட் டீம்ட் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய பைபிள் திறந்த பல்கலைக்கழகம் என இரு பல்கலைக்கழகங்கள் செயல்பட்டுவருவதாக UGC பட்டியல் குறிப்பிடுகிறது.
கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகம் உள்ளன. பெல்காமில் படகன்வி சர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சங்கம்; செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம் கிஷாநத்தம் மற்றும் நாக்பூரில் உள்ள ராஜா அரபு பல்கலைக்கழகம்.
மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தைலாஸ்பேட்டையில் உள்ள ஸ்ரீ போதி உயர்கல்வி அகாடமி என்ற பல்கலைக்கழகம், யூஜிசி அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகம் ஆகும்.
மேலும் படிக்க | 27 முறை தேர்வெழுதிய கோடீஸ்வரர்... இந்த வருடமும் பெயில்தான் - முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ