H-1B விசா வரம்பு தொடர்பாக ஜோ பிடன் முக்கிய முடிவு எடுக்கக் கூடும்..!!!

தகவல் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ள துறையினருக்கு ட்ரம்ப் நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்ட H-1B விசா விதிமுறையின்படி பணியாளர்கள் அதிகபட்சம் ஓராண்டுக்கு மட்டுமே பணி புரிய அனுமதிக்கப்படுவர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 8, 2020, 03:52 PM IST
  • தகவல் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ள துறையினருக்கு ட்ரம்ப் நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்ட H-1B விசா விதிமுறையின்படி பணியாளர்கள் அதிகபட்சம் ஓராண்டுக்கு மட்டுமே பணி புரிய அனுமதிக்கப்படுவர்.
  • முன்னதாக மூன்றாண்டு கால என்ற காலவரம்பு ஓராண்டாக குறைக்கப்பட்டது.
H-1B விசா வரம்பு தொடர்பாக ஜோ பிடன் முக்கிய முடிவு எடுக்கக் கூடும்..!!! title=

வாஷிங்டன்: அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அதிபர் ஜோ பிடன் (Joe Biden) H-1B விசா உள்ளிட்ட உயர் திறன் விசாக்களின் வரம்பை அதிகரிக்கக்கூடும். கூடுதலாக, அவர் பல்வேறு நாடுகளுக்கான வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியும். இந்த இரண்டு நடவடிக்கைகளும் ஆயிரக்கணக்கான இந்திய நிபுணர்களுக்கு பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ள துறையினருக்கு ட்ரம்ப் நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்ட H-1B விசா விதிமுறையின்படி பணியாளர்கள் அதிகபட்சம் ஓராண்டுக்கு மட்டுமே பணி புரிய அனுமதிக்கப்படுவர். முன்னதாக மூன்றாண்டு கால என்ற காலவரம்பு ஓராண்டாக குறைக்கப்பட்டது.

டொனால்ட் டிரம்ப் (Donald Trump) நிர்வாகத்தின் இது போன்ற சில குடியேற்றக் கொள்கைகளால் இந்திய தொழில் வல்லுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

H-1B விசா வைத்திருப்பவர்களின் துணைவருக்கான பணி விசா அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்வதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் முடிவையும் பிடென் ரத்து செய்யக்கூடும் என்று நம்பப்படுகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவால் அமெரிக்காவில் வாழும் இந்திய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்ட  பின்னர், 'இது அமெரிக்க மக்களின் வெற்றி' என்று பிடென் கூறினார், பின்னர் ஜோ பிடன் (Joe Biden)  இந்த முக்கிய வாக்குறுதியை அளித்தார்.

கமலா ஹாரிஸ் (Kamala Harris) அமெரிக்காவின் புதிய துணை அதிபராக இருப்பார்.

ALSO READ | வெள்ளை மாளிகை வேந்தன் ஆனார் ஜோ பிடன்.. துணை அதிபர் கமலா ஹாரிஸ்... ஒரு பார்வை..!!!

பிடென் நிர்வாகம் ஒரு பெரிய குடியேற்ற சீர்திருத்தத்தில் செயல்பட திட்டமிட்டுள்ளது. நிர்வாகம் இந்த சீர்திருத்தங்களை வெளிப்படையாகவோ அல்லது படிப்படியாகவோ செயல்படுத்தும்.

தற்போது அமெரிக்காவில் (America) H-1B விசா மூலம் பணி புரிவோர் 5.83 லட்சம் என தரவுகள் தெரிவிக்கின்றன. 3.50 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவும், கனடாவைச் சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் H-1B விசா பெற்று அமெரிக்காவில் பணி புரிகின்றனர்.

ALSO READ | சித்தி கமலா ஹாரிஸ் வெற்றியை கொண்டாட காத்திருக்கும் தமிழக கிராமம்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News