இந்தியாவில் கொரோனா பரவல் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டும் வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மே ஒன்றாம் தேதியிலிருந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கோவாக்சின் (Covaxin), கோவிஷீல்டு (Covoshield) ஆகிய இரு தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அமெரிக்க நிறுவனமான நோவாவாக்ஸுடன் (Novavax) இணைந்து, கோவிட் -19 தடுப்பூசி கோவோவாக்ஸ் (Covovax) 3 ஆம் கட்ட பரிசோதனையை தொடங்க, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
கோவோவாக்ஸ் தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் பங்கேற்ற 200 பேரின் தரவுகளை மதிப்பாய்வு செய்த பிறகு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
ICMR-தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் அபிஜித் கதம், மூன்றாம் கட்ட சோதனை மே மாதம் இரண்டாவது வாரம் தொடங்கலாம் என்று கூறினார்.
ALSO READ | COVID-19: தனிமைபடுத்தப்பட்ட நோயாளிக்கு மருத்துவமனை சிகிச்சை எப்போது தேவைப்படுகிறது
இதற்கிடையில், SII தனது தடுப்பூசி வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக 240 மில்லியன் பவுண்டுகள் இங்கிலாந்தில் முதலீடு செய்வதாகவும், அதிக எண்ணிக்கையிலான வேலைகளை உருவாக்கும் புதிய விற்பனை அலுவலகத்தை அமைப்பதாகவும் கூறியுள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட்டின் உற்பத்தித் திறன் ஆறு மாதங்களுக்குள் ஆண்டுக்கு 250 கோடி என்ற அளவிலிருந்து 300 கோடி அளவிற்கு உயர்த்தப்படும் என்று அதார் பூனவல்லா கூறியிருந்தார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு 3,449 பேர் பலியாகி உள்ளனர் என சுகாதார அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது. நேற்று முன்தினம் 3.92 லட்சம் என்ற அளவிலும், நேற்று 3.68 லட்சம் என்ற அளவிலும் இருந்த தொற்று பாதிப்பு இன்று 3.57 லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்று நாட்களுக்கு முன் தொற்று பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது
ALSO READ | மத்திய அரசிடம் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கிறது: SII அதார் பூனவல்லா
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR