பிரான்ஸ் அறிக்கையினை பற்றி கவலை வேண்டாம் -ராகுல் காந்தி!

ரபேல் போர் விமான தொடர்பான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பிரான்ஸ் மறுத்துள்ளது, எனினும் அதனை பற்றி கவலைப்பட வேண்டாம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்!

Last Updated : Jul 20, 2018, 09:32 PM IST
பிரான்ஸ் அறிக்கையினை பற்றி கவலை வேண்டாம் -ராகுல் காந்தி! title=

ரபேல் போர் விமான தொடர்பான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பிரான்ஸ் மறுத்துள்ளது, எனினும் அதனை பற்றி கவலைப்பட வேண்டாம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்!

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா 2016–ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதுகுறித்த தகவல்களை வெளியிடவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி வருகின்றார். ஆனால் இதுகுறித்து தகவல்கள் ஏதும் தெரிவிக்க முடியாது என்று ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து மறுத்துவருகின்றார்.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றி ராகுல் காந்தி, இதுகுறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த விவகாரம் குறித்து ராகும் பேசுகையில்... பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரனை டெல்லியில் நான் சந்தித்தபோது, அவர் ரபேல் ஒப்பந்தம் ரகசியமான ஒன்று அல்ல என்று என்னிடம் தெரிவித்தார். ஆனால் நிர்மலா சீதாராமன் இந்த திட்டம் ரகசியமான என பொய் சொல்கிறார் என்று குற்றம் சாட்டினார். 

ராகுல் காந்தியின் இந்த கருத்தினை மறுக்கும் வகையில் தற்போது பிரான்ஸ் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கையினை குறித்து கவலைப் பட வேண்டாம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் நாடு இதற்கு மறுப்பு தெரிவிக்கட்டும். ஆனால், நான் அவரை சந்தித்து பேசிய போது, என்னுடன், ஆனந்த் சர்மா மற்றும் மன்மோகன் சிங் இருந்தனர். நான் மக்களவையில் என்ன கூறினேனோ அதில் நான் உறுதியாக இருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்

Trending News