Rising Unemployment: நாட்டில் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஒருபுறம் மக்கள் உயிரை இழந்து கொண்டிருக்கும் நேரத்தில், மறுபுறம், சாமானிய மக்களை "வேலையின்மை" பிரச்சனை மிகவும் உலுக்கியுள்ளது. இப்போது அவர்களுக்கு முன்னால் வாழ்வாதார நெருக்கடி எழுந்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, ஏராளமான மக்கள் வேலையில்லாமல் போய்விட்டனர். இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகனாமி பிரைவேட் லிமிடெட் (CMIE) அறிக்கையின்படி, கோவிட் -19 இன் இரண்டாவது அலை காரணமாக ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர். மேலும் வேலையின்மை விகிதம் (Unemployment Rate) மே மாதத்தில் 12 சதவீதமாகவும், ஏப்ரல் மாதத்தில் 8 சதவீதமாகவும் இருந்தது எனவும் தெரிவித்துள்ளது.
வேலையின்மை விவகாரம் மத்திய அரசு மீதான ராகுலின் தாக்குதல்:
நாட்டில் வேலையின்மை அதிகரித்தது வருவதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (Rahul Gandhi) தனது ட்விட்டர் பக்கத்தில், மோடி அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ட்வீட் செய்து "அப் கி பார் கோடி வேலையற்றோர். இதற்கு யார் பொறுப்பு? மோடி அரசு மட்டும் தான்!" எனத் தாக்கி உள்ளார்.
ALSO READ | இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நகரம் எது? தமிழகம் எந்த இடத்தில்?
"அப் கி பார்" என்றால் "இந்தமுறை" என அர்த்தம். அதாவது "இந்தமுறையும் கோடி பேர் வேலை இழந்துள்ளனர்;. அதற்கு யார் பொறுப்பு? எனக் கேள்வி எழுப்பியவர் அவர், வேலையின்மைக்கு காரணம் மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு தான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
कौन ज़िम्मेदार?
सिर्फ़ और सिर्फ़ मोदी सरकार!
— Rahul Gandhi (@RahulGandhi) June 3, 2021
சிஎம்ஐ அறிக்கை என்றால் என்ன?
சி.எம்.ஐ அறிக்கையின்படி, கடந்த ஆண்டு தொற்றுநோய் (Coronavirus in India) பரவியது முதல் 97 சதவீத குடும்பங்கள் வருமானத்தை இழந்துள்ளன. சி.எம்.ஐ.இ தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் வியாஸ் கூறுகையில், அமைப்புசாரா துறையில் முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட துறை அல்லது முறையான துறை மீண்டும் சரியான பாதையில் செல்ல அதிக காலம் ஆகும். இத்தகைய சூழ்நிலையில், வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைப்பது கடினம்.
அந்த அறிக்கையின்படி, வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 12 சதவீதமாகவும், ஏப்ரல் மாதத்தில் 8 சதவீதமாகவும் இருந்தது. அதே நேரத்தில், மே 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலக்கட்டத்தில் நகர்ப்புற வேலையின்மை 17.18 சதவீதமாகவும், நகர்ப்புற வேலையின்மை விகிதத்தில் 15 நாட்களில் 3 சதவீதம் புள்ளிகள் அதிகரித்துள்ளது.
ALSO READ | மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுக்கு கடவுளைக் குறை கூற வேண்டாம்: மையத்திற்கு ப.சிதம்பரம்
3 சதவீத குடும்பத்தில் மட்டுமே வருமானம் அதிகரித்துள்ளது:
சி.எம்.ஐ.இ ஏப்ரல் மாதத்தில் 1.75 லட்சம் குடும்பங்கள் குறித்த நாடு தழுவிய கணக்கெடுப்பை நிறைவு செய்தது. அந்த கணக்கெடுப்பின் படி, 3 சதவீதம் வீடுகளில் மட்டுமே வருமானம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது. 55 சதவீதம் பேர் வருமானம் குறைவாக இருப்பதாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில், 42 சதவிகிதத்தினர் தங்கள் வருமானத்தை முந்தைய ஆண்டு போல சமமாக இருந்தாகத் தெரிவித்துள்ளனர்.
கொரோனா காரணமாக பல பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் சரிந்துள்ளது. இதனால் நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.
அனைத்து செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR