நாட்டை பிளவுபடுத்த நினைக்கிறது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் :ராகுல்காந்தி தாக்கு

லண்டனில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தாக்கி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 24, 2018, 06:30 PM IST
நாட்டை பிளவுபடுத்த நினைக்கிறது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் :ராகுல்காந்தி தாக்கு title=

ஜெர்மனியில் இருந்து லண்டன் வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் பாஜகவைத் தாக்கி பேசியுள்ளார். இந்தமுறை ராகுல்காந்தி ஆர்எஸ்எஸ் உடன் முஸ்லீம் சகோதரத்துவத்தை ஒப்பிட்டு பேசினார். 

லண்டனில் சர்வதேச மூலோபாய ஆய்வு கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எஸ்.எஸ்) பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:-

"காங்கிரஸ் அனைவருக்கும் சொந்தமானது, எங்கள் வேலை வேறுபாடுகளில் ஒற்றுமை என்ற சிந்தனை பரப்ப வேண்டும் என்பதே, அனால் இன்று இந்தியாவை ஆட்சி செய்யும் அரசாங்கம் வேறு விதமாக வேலை செய்கிறது. பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சேர்ந்து சொந்த மக்களைப் பிரிக்க நினைக்கிறார்கள். அவர்கள் நம் நாட்டில் வெறுப்பை பரப்புகிறார்கள். 

 

எங்கள் வேலை மக்களை ஒன்றிணைப்பதோடு நாட்டை முன்னெடுத்துச் செல்வதும், அதை எவ்வாறு செய்வது என நாங்கள் காட்டியுள்ளோம் என்றார்.

இந்தியாவில் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தால், நீண்ட பேச்சுக்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மக்களிடையே வெறுப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை பார்க்க முடியவில்லை. 

 

24 மணி நேரத்தில் சீனா 50,000 மக்களுக்கு வேலை தருவதாகவும், அதே நேரத்தில் இந்தியாவில் 450 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் சுட்டிக்காட்டினார்.

Trending News