புதுடெல்லி: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தொகை / நிதி வழங்கலுக்காக காத்திருக்கும் விவசாயிகள் டிசம்பர் 25 ஆம் தேதி அதைப் பெறுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ரைசன் நகரில் நடைபெற்ற `கிசான் கல்யாண்’ நிகழ்வில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாள் விழாவில் விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், அன்றே கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு PM Kisan திட்டத்தின் அடுத்த தவணை கிடைக்கும் என்றும் கூறினார்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் 2019 ஆம் ஆண்டில் பிரதமர் மோடியால் (PM Modi) தொடங்கப்பட்டது. இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நில உரிமையாளர் விவசாய குடும்பங்களுக்கும் சாகுபடி நிலங்களுடன் வருமான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ .6000 தொகை மூன்று 4 மாத தவணைகளில் தலா ரூ .2000 நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்படுகிறது.
சிறு மற்றும் குறு விவசாயிகளின் குடும்பங்களுக்கு மட்டுமே PM-KISAN திட்டமா?
PM Kisan திட்டம் தொடங்கப்பட்டபோது (பிப்ரவரி, 2019), அதன் நன்மைகள், 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்த சிறு மற்றும் குறு விவசாயிகளின் குடும்பங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இந்த திட்டம் பின்னர் ஜூன் 2019 இல் திருத்தப்பட்டது. அதன் பிறகு விவசாயங்களின் நிலங்களின் அளவைப் பொருட்படுத்தாமல் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ .6,000 பெறும் வசதியை நாட்டின் அனைத்து 14.5 கோடி விவசாயிகளுக்கும் வழங்குவதற்கான முடிவை மத்திய அரசு அறிவித்திருந்தது.
ALSO READ: விவசாயிகளை முன்னேற விடுங்கள் : பிரதமர் நரேந்திர மோடி
PM-KISAN திட்டத்திலிருந்து யார் விலக்கப்படுகிறார்கள்?
PM-KISAN திட்டத்திலிருந்து விலக்கப்பட்டவர்களில் நிறுவன நில உரிமையாளர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள் மற்றும் மாநில அல்லது மத்திய அரசு (Central Government) ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை செயல்திட்டங்கள் மற்றும் அரசு தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகளும் அடங்குவர்.
டாக்டர்கள், பொறியாளர்கள் மற்றும் வக்கீல்கள் போன்ற தொழில் வல்லுநர்கள் மற்றும் மாதந்தோறும் ரூ .10,000 க்கு மேல் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்கள் ஆகியோரும் இந்த சலுகைகளுக்கு தகுதியற்றவர்கள்.
PM-KISAN திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற தகுதியானவர்கள் யார்?
தங்கள் பெயரில் சாகுபடி நிலங்களைக் கொண்டுள்ள அனைத்து நில உரிமையாளர் விவசாயிகளின் குடும்பங்களும் இத்திட்டத்தின் கீழ் நன்மை பெற தகுதியுடையவர்கள்.
ALSO READ: Farmers Protest: 1000km சைக்கிளில் பயணித்து டில்லி போராட்டத்திற்கு வந்த விவசாயி
ஒரு வருடத்தில் எத்தனை முறை PM-KISAN திட்ட உதவி வழங்கப்படும்?
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PMKSNY) திட்டத்தின் கீழ், அனைத்து நில உரிமையாளர் விவசாயிகளின் குடும்பங்களுக்கும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ .6000 நிதி உதவி வழங்கப்படும். ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் தலா ரூ .2000 என்ற மூன்று சம தவணைகளில் இது செலுத்தப்படும். திட்டத்தின் கீழ் 1 வது தவணை காலம் 01.12.2018 முதல் 31.03.2019 வரையும், 2 வது தவணை 01.04.2019 முதல் 31.07.2019 வரையும் மூன்றாவது தவணை 01.08.2019 முதல் 30.11.2019 வரையும் இருந்தது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR