Forbes-ன் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் நிர்மலா...

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பிடித்துள்ளார்!

Last Updated : Dec 13, 2019, 02:34 PM IST
Forbes-ன் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் நிர்மலா... title=

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பிடித்துள்ளார்!

உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், HCL கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ரோஷ்னி நாதர் மல்ஹோத்ரா மற்றும் பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா ஆகியோரை இடம்பெற்றுள்ளனர். 

உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்களின் 2019 பட்டியலினை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் முதலிடத்தில் உள்ளார்.
 
குறித்த இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் மற்றும் மூன்றாவது இடம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா 29-வது இடத்தில் உள்ளார். 

இதுகுறித்து போர்ப்ஸ் கூறுகையில், 2019-ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள பெண்களிடமிருந்து தீவிரமாக நகர்ந்து அரசாங்கம், தொழில்கள், ஊடகங்கள் மற்றும் தொண்டு பணிகளில் தலைமைப் பங்கு வகிப்பர்களை குறித்து ஆராய்ந்தது. மிகுந்த ஆய்விற்கு பின்னர் இந்த போர்ப்ஸ் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் நிர்மலா சீதாராமன் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அவர் 34-வது இடத்தில் உள்ளார். வருகாலங்களில் அவரது நிலை முன்னேற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராக வரலாறு படைக்க காத்திருக்கும் நிர்மலா சீதாராமன் முன்னதாக மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்தார். நிதி அமைச்சகத்தை சுயாதீனமாக நடத்திய முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் எனும் பெயர் பெற்றுள்ளார். முன்னதாக, 1970 -71 காலக்கட்டத்தில் நிதியமைச்சின் பொறுப்பு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

போர்ப்ஸ் பட்டியலில் 54-வது இடத்தில் உள்ள ரோஷ்னி மல்ஹோத்ரா, HCL கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கின்றார். 8.9 பில்லியன் டாலர் நிறுவனத்தில் அனைத்து மூலோபாய முடிவுகளையும் எடுப்பதற்கு அவர் பொறுப்பு ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News