குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 -ம் தேதியுடன் முடிவடைகிறது. நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல், அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 29-ம் தேதி முடிவடைய உள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு-வும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். திரௌவுபதி முர்மு நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக கூட்டணிக்கு 48% வாக்குகள் உள்ள நிலையில், பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதால் பிற கட்சிகளின் ஆதரவும் அவருக்கு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிப்பதாக பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | குடியரசுத் தலைவர் தேர்தல் : நிதிஷ்குமாரின் ஆதரவு யாருக்கு?
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒடிசாவின் மகளான திரௌபதி முர்முவை நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்க, கட்சி வேறுபாடுகளை தவிர்த்து, ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
BJP President Shri @JPNadda ji spoke to me about the filing of nomination of Smt #DraupadiMurmu ji for #PresidentElection. My cabinet colleagues Shri @saraka_fan and Smt @TukuniSahu will sign nomination papers today and attend the event tomorrow.#OdishaLeads
— Naveen Patnaik (@Naveen_Odisha) June 23, 2022
மேலும் ஒடிசா அமைச்சர்கள் ஜகன்நாத் சராகா, துகுனி சாகு ஆகியோர் திரௌபதி முர்மு வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்துகொள்வர் எனவும் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அதிகாரப் போட்டி! அரசியல் குழப்பம்! முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி விலகுவாரா?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR