தோனி மனைவி வீட்டிலும் பவர் கட்டா? ட்விட்டரில் கொந்தளித்த சாக்‌ஷி

ஜார்க்கண்டில் நிலவும் தொடர் மின்வெட்டு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் மனைவி சாக்‌ஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

Written by - Chithira Rekha | Last Updated : Apr 26, 2022, 11:19 AM IST
  • தோனி வீட்டிலும் எதிரொளித்த மின்வெட்டு
  • பல ஆண்டுகளால மின்வெட்டு ஏன் என சாக்‌ஷி தோனி கேள்வி
  • ஜார்க்கண்டில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
தோனி மனைவி வீட்டிலும் பவர் கட்டா? ட்விட்டரில் கொந்தளித்த சாக்‌ஷி  title=

மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகிப்பதில் தட்டுப்பாடு நிலவுவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் மின்வெட்டு நிலவுகிறது. கோடை வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

மின் உற்பத்தி நிலையங்களுக்கு உரிய நேரத்தில் நிலக்கரி விநியோகம் செய்யப்படாததால் ஏற்பட்டுள்ள மின் உற்பத்தி பாதிப்பை சரிசெய்யவும், அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கான குறுகிய மற்றும் நீண்ட கால தீர்வுகள் குறித்து மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

மேலும் படிக்க | தூத்துக்குடியிலும் நிலக்கரி தட்டுப்பாடு - மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோடையின் தாக்கத்தால் 40 டிகிரி செல்சியசிற்கு மேல் வெப்பம் நிலவுகிறது.  சிங்பூம், கோடெர்மா மற்றும் கிரிதிஹ் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை வீசுகிறது. நாளை மறுதினத்திற்குள் ராஞ்சி, பொகாரோ, கர்வா, பலாமு மற்றும் சத்ரா ஆகிய மாவட்டங்களிலும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் மின்வெட்டு நிலவும் நிலையில் ஜார்க்கண்ட் மாநிலமும் அதில் விதிவிலக்கல்ல. இந்த மின்தடை குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான தோனியின் மனைவி சாக்‌ஷி கேள்வி எழுப்பியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரசுக்கு வரி செலுத்துபவர் என்ற முறையில், ஜார்க்கண்டில் பல ஆண்டுகளாக மின் நெருக்கடி ஏன் உள்ளது என்பதை அறிய விரும்புவதாகக் கேள்வி எழுப்பிய அவர், ஆற்றலைச் சேமிப்பதை உறுதி செய்வதன் மூலம் தங்களின் பங்கைச் சரியாக செய்து வருவதாகவும் சாக்‌ஷி குறிப்பிட்டுள்ளார். 

கடந்த ஓராண்டாக ட்விட்டரில் எந்த பதிவும் இடாத சாக்‌ஷி, தற்போது மின்வெட்டு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க | கணவர் MS Dhoniயின் சர்வதேச கிரிக்கெட் ஓய்வுக்கு சாக்‌ஷியின் எதிர்வினை...

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News