11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து, பருவ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி...

அரசுப் பள்ளிகளின் 11-ஆம் வகுப்பு மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு உயர்த்த மணிப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Last Updated : Apr 28, 2020, 02:18 PM IST
11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து, பருவ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி... title=

அரசுப் பள்ளிகளின் 11-ஆம் வகுப்பு மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு உயர்த்த மணிப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பள்ளி கல்விதுறை ஆணையர் டி.ரஞ்சித் சிங் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தொற்றுநோய் வெடிப்பு காரணமாக 2019-20 கல்வியாண்டிற்கான 11-ஆம் வகுப்பு தேர்வு நீக்கப்படும் என்றும், பருவ தேர்வு செயல்திறனின் அடிப்படையில் மாணவர்கள் 12-ஆம் வகுப்புக்கு உயர்த்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிகளால் "நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கை" மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

உயர்நிலை கல்வி கவுன்சில் மணிப்பூர் (COHSEM) நடத்திய 11-ஆம் வகுப்பு தேர்வு பிப்ரவரி நடுப்பகுதியில் ஐந்து பாடங்களில் வினாத்தாள்கள் கசிந்த பின்னர் ரத்து செய்யப்பட்டது. மேலும் ஐந்து பாடங்களுக்கான தேர்வு பிற்பகுதியில் நடைபெறும் என்று COHSEM அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது 11-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் முயற்சியில் நாடுதழுவிய முழு அடைப்பு தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 29, 663 கொரோனா தொற்று பதிவாகியிருப்பதாகவும், இதில் தற்போது 7,176 பேர் சிகிச்சைக்குப் பின்னர் நலம் பெற்று வீடு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றும் 940 பேர் இதுவரை கொரோனா தொற்றால் இந்தியாவில் உயிர் இழந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மனிப்பூரை பொறுத்தவரையில் இதுவரை 2 கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதில் ஒரு வழக்கு மேற்கு இம்பாலிலும், மற்றொரு வழக்கு கிழக்கு இம்பாலிலும் பதிவாகியுள்ளது. இருவரும் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்று மாநிலங்களை காட்டிலும் குறைவான தொற்று பதிவுசெய்துள்ள மனிப்பூர், வரும் காலங்களில் கொரோனா பரவுதல் அதிகரிக்கலாம் என்ற கணிப்பில் முழு அடைப்பை கடைப்பிடித்து வருகிறது.

Trending News