ஜனவரி 1, 2023 முதல் பல விதிகளில் மாற்றம்: சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்

Changes from January 1 2023: புதிய ஆண்டில் முக்கியமான பல விதிகளில் மாற்றம் ஏற்படும். வங்கி, இன்சூரன்ஸ், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் தொடர்பான இந்த விதிகள் குறித்த தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 31, 2022, 11:29 AM IST
  • வங்கி லாக்கர் தொடர்பான புதிய வழிகாட்டியை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது.
  • புதிய விதிகள் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும்.
  • இதன்படி, வங்கிகள் லாக்கர் விவகாரத்தில் வாடிக்கையாளர்களிடம் தன்னிச்சையாக செயல்பட முடியாது.
ஜனவரி 1, 2023 முதல் பல விதிகளில் மாற்றம்: சாமானியர்களுக்கு நேரடி தாக்கம் title=

புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. வரும் ஆண்டில் பல முக்கிய விஷயங்களின் மாற்றம் இருக்கும். இதில் சாமானியர்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய பல விஷயங்களும் உள்ளன. பல மாற்றங்கள் நேரடியாகவும், சில மறைமுகமாகவும் சாமானியர்களை பாதிக்கக்கூடும். புதிய ஆண்டின் மாற்றங்களில் ஜிஎஸ்டி விகிதம், வங்கி லாக்கர் விதிகள், சிஎன்ஜி-பிஎன்ஜி விலைகள், கிரெடிட் கார்டு விதிகள் ஆகியவை அடங்கும். அரசு வெளியிடும் மாற்றங்கள் அனைவருக்கும் கட்டாயமாக இருக்கும்.

என்பிஎஃஸ் பார்ஷியல் வித்ட்ராயல்

உலக மக்களை பாடாய் படுத்திய கொரோனா தொற்று, தற்போது சற்று அடங்கி வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து பிஎஃப்ஆர்டி ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்தது. இதன்படி அனைத்து அரசுத் துறை வாடிக்கையாளர்களின் (மத்திய, மாநில மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகள்) வாடிக்கையாளர்களும் இப்போது ஒரு பகுதி அளவிலான தொகையை வித்டிரா செய்ய (NPS Partial Withdrawal), அதற்கான விண்ணப்பத்தை நோடல் அதிகாரியிடம்தான் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியக் கட்டுப்பாட்டாளரான பிஎஃப்ஆர்டிஏர், ஜனவரி 2021-ல், சுய அறிவிப்பு, அதாவது செல்ஃப் டிக்லரேஷன் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து பகுதியளவு தொகையை வித்டிரா செய்ய அனுமதித்தது. 

புதிய வங்கி லாக்கர் விதிகள்

வங்கி லாக்கர் தொடர்பான புதிய வழிகாட்டியை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. புதிய விதிகள் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும். இதன்படி, வங்கிகள் லாக்கர் விவகாரத்தில் வாடிக்கையாளர்களிடம் தன்னிச்சையாக செயல்பட முடியாது. புதிய விதியின்படி, வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கு வங்கியே பொறுப்பாகும். இதற்காக வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும். இது டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும். லாக்கர் தொடர்பான விதிகளில் மாற்றம் செய்வது குறித்த அனைத்து தகவல்களையும் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் பிற வழிகளில் தெரிவிக்க வேண்டும்.

மேலும் படிக்க | EPFO புதிய விதி, ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்

கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றங்கள்

ஜனவரி 1, 2023 முதல், கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது பெறும் ரிவார்டு புள்ளிகளில் மாற்றம் ஏற்படும். புத்தாண்டு தொடக்கத்தில் இருந்து, எச்டிஎஃப் வங்கி தனது கிரெடிட் கார்டில் இருந்து பணம் செலுத்தும்போது பெறும் வெகுமதி புள்ளிகளுக்கான (ரிவார்ட் பாயிண்ட்ஸ்) வழிமுறையில் மாற்றம் செய்யும். இதுபோன்ற சூழ்நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளில் மீதமுள்ள அனைத்து ரிவார்டு புள்ளிகளையும் டிசம்பர் 31, 2022 க்கு முன் ரெடீம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில் ஜனவரி 1, 2023 முதல், புதிய விதிகளின்படி, வெகுமதி புள்ளிகளின் வழிமுறைகளில் அதிக மாற்றம் ஏற்படும். 

சிஎன்ஜி-பிஎஞ்ஜி விலையில் மாற்றங்கள்

புத்தாண்டில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை மாற்றத்துடன் சிஎன்ஜி மற்றும் சமையல் பிஎஞ்சி எரிவாயு விலையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த ஓராண்டில், தேசிய தலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், சிஎன்ஜியின் விலை 70 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மறுபுறம், ஆகஸ்ட் 2021 முதல், பிஎன்ஜி கட்டணங்களில் 10 உயர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி தொடர்பான விதிகள் மாறும்

ஜிஎஸ்டி இ-இன்வாய்சிங் மற்றும் எலக்ட்ரானிக் பில் தொடர்பான விதிகளிலும் முக்கிய மாற்றங்கள் இருக்கும். ஜிஎஸ்டி இ-இன்வாய்சிங் வரம்பை ரூ.20 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக அரசாங்கம் குறைத்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஐந்து கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் விற்றுமுதல் உள்ள வர்த்தகர்கள் மின்னணு பில்களை உருவாக்குவது இப்போது அவசியமாகிறது.

மேலும் படிக்க | சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது மத்திய அரசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News