கேதார்நாத் கோவில் நடை வரும் ஏப்ரல் மாதம் 29ம் தேதி திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலை 6:10 மணிக்கு கோயிலின் வாயில்கள் திறக்கப்படும் என்று பத்ரிநாத்-கேதார்நாத் மந்திர் சமிதி தலைவர் மோகன் பிரசாத் தப்லியால் தெரிவித்தார்.
இமயமலைத் தொடரில் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில் அமைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில், கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.
இந்த கோவில் குளிர் காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு 6 மாதத்திற்குப் பிறகு வரும் ஏப்ரல் மாதம் 29-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிவபெருமானின் சிலை ஏப்ரல் 26 ம் தேதி உக்கிமத்திலிருந்து புறப்பட்டு பக்தர்கள் தோள்களில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பல்லக்கில் ஏப்ரல் 25 ஆம் தேதி பைரவநாத் பூஜைக்குப் பிறகு ஏப்ரல் 28 ஆம் தேதி ஃபதா மற்றும் கௌரிகுண்ட் வழியாக கேதார்நாத்தை அடையும்.
கோயிலின் வாயில்கள் ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 6:10 மணிக்கு 'மேஷ லக்னம்' அன்று வேத பாடல்களை உச்சரிப்பதன் மத்தியில் மீண்டும் திறக்கப்படும் என்று தப்லியால் மேலும் தெரிவித்தார்.