‘காமசூத்ரா’ நாயகி சாயிரா கான் மாரடைப்பால் காலமானார்!

காமசூத்ரா பிரபலம் சாயிரா கான் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Apr 21, 2019, 04:00 PM IST
‘காமசூத்ரா’ நாயகி சாயிரா கான் மாரடைப்பால் காலமானார்! title=

காமசூத்ரா பிரபலம் சாயிரா கான் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

2013-ஆம் ஆண்டு வெளியான Kamasutra 3D திரைப்படத்தில் நடித்த நடிகை சாயிரா கான் மாரடைப்பு காரணமாக பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாயிரா கானின் இறப்பு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள காமசூத்ரா திரைப்பட இயக்குநர் ரூபேஷ் பவுள் தெரிவிக்கையில்., "சாயிரா-வின் இறப்பு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைகிறேன். ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்த்த இளம்பெண்ணான சாயிரா கானை எனது படத்தில் நடிக்க வைக்க நான் பெரிதும் பாடுபட்டேன். அவரின் சம்மதம் பெற பல மாதங்கள் காத்திருந்தேன், இறுதியாக அவரது கண்டிப்பிற்கு தகுந்த பலனை அவர் அளித்து சென்றார்.

சாயிரா-வின் இறப்பு செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன், அவரது இறப்பு குறித்து ஊடகங்கள் ஏதும் செய்தி வெளியிடவில்லை. ஊடகங்களில் இந்த செயல்பாடு எனக்கு மேலும் வருத்தம் அளித்துள்ளது. அவரது நடிப்பு புகழப்பட வேண்டிய ஒன்று ஆனால், எவரும் அவரை பற்றி பேசாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திரக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Kamasutra 3D திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு சாயிரா சில பிராந்திய திரைப்படங்களில் நடிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News