இந்தியா, பாகிஸ்தான் கர்த்தார்பூர் நடைபாதை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன; யாத்ரீகர்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது..!
கர்தார்பூர் நடைபாதையை இயக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் வியாழக்கிழமை கையெழுத்திட்டன. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் எஸ்.சி.எல். தாஸ், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்பது கர்தார்பூர் தாழ்வாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானால் ஒரு முறையான கட்டமைப்பை வகுத்துள்ளது என்று கூறினார். "இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், கர்த்தார்பூர் சாஹிப் தாழ்வாரத்தை செயல்படுத்துவதற்கான முறையான கட்டமைப்பை வகுத்துள்ளனர்" என்று தாஸ் கூறினார்.
சீக்கிய மதத்தின் நிறுவனரும், அந்த மதத்தின் முதல் குருவுமான குருநானக், தன் வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை, பஞ்சாப் மாநிலத்தையொட்டி, பாகிஸ்தானில் அமைந்துள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்கு அவரது நினைவாக தர்பார் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தை குருநானக்கின் 550-வது பிறந்த நாளையொட்டி, அடுத்த மாதம் 9 ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திறந்து வைக்கிறார். கர்தார்பூரில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு இங்குள்ள சீக்கியர் ஒருவர் சென்று வருவதற்கு பாகிஸ்தான் 20 டாலர் (சுமார் ரூ.1,400) கட்டணம் விதிக்கும். முதலில் இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் இரு தரப்பிலும் 3 முறை பேச்சு வார்த்தை நடந்தது. அதன்பின்னர் பாகிஸ்தானின் கட்டண விதிப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது.
SCL Das, Joint Secretary, MHA: Indian pilgrims of all faith and persons of Indian origin they can use the #KartarpurCorridor. The travel will be visa-free. Pilgrims need to carry only a valid passport. https://t.co/K3vogJlyO2
— ANI (@ANI) October 24, 2019
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் தாஸ், அனைத்து இந்தியர்களும் விசா இல்லாமல் பாஸ்போர்ட்டுடன் கர்த்தார்புருக்கு சென்று வரலாம் என்று தெரிவித்தார். பக்தர்கள் அதிகபட்சமாக 11 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும், ஏழு கிலோ எடையுள்ள உடைமைகளையும் கொண்டு செல்லலாம். ஆன்லைன் மூலம் முன்பதிவு தொடங்கியிருப்பதாகவும் பக்தர்களுக்கு மதிய உணவு மற்றும் பிரசாதம் பரிமாறப்படும் என்று பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆயினும் பக்தர்களிடம் 1500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் முடிவை பாகிஸ்தான் திரும்பப் பெறவில்லை. கடும் நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு, கர்த்தார்புர் யாத்திரை மூலம் ஆண்டுக்கு 555 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.