இந்து அகதிகளுக்கு இந்தியாவை தவிர வேறு எந்த நாடு உள்ளது -ரூபானி!

இந்து அகதிகளுக்கு இந்தியாவை தவிர வேறு எந்த நாடு போக்கிடம் அளிக்கமுடியும் என குஜராத் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்!

Last Updated : Dec 25, 2019, 12:30 PM IST
இந்து அகதிகளுக்கு இந்தியாவை தவிர வேறு எந்த நாடு உள்ளது -ரூபானி! title=

இந்து அகதிகளுக்கு இந்தியாவை தவிர வேறு எந்த நாடு போக்கிடம் அளிக்கமுடியும் என குஜராத் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்!

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) ஆதரித்து, உலகின் 150 இஸ்லாமிய நாடுகளில் ஏதேனும் ஒன்றிற்கு செல்ல முஸ்லிம்களுக்கு வாய்ப்பு உள்ளது, ஆனால் இந்துக்களுக்கு இந்தியா மட்டுமே உள்ளது, அவர்கள் எங்கு செல்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்?

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய குஜராத் முதல்வர் இந்த அறிக்கையை வெளியிட்டார். இந்த விஷயத்தில் மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் விருப்பங்களை மதிக்க முந்தைய ஆட்சி தவறிவிட்டது என்றும் ரூபானி குற்றம்சாட்டினார்.

மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “பிரிவினையின் போது (1947-இல்) பாகிஸ்தானில் 22 சதவீத இந்துக்கள் இருந்தனர். இப்போது, ​​துன்புறுத்தல், கற்பழிப்பு மற்றும் தொடர்ச்சியான சித்திரவதை காரணமாக, அவர்களின் மக்கள் தொகை வெறும் 3 சதவீதமாக குறைந்துள்ளது. அதனால்தான் இந்துக்கள் மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்புகிறார்கள். இந்த துன்பகரமான இந்துக்களுக்கு உதவ காங்கிரஸ் செய்ய வேண்டியதை நாங்கள் செய்கிறோம். நாங்கள் இப்போது அதைச் செய்யும்போது, ​​நீங்கள் அதை எதிர்க்கிறீர்கள்,” என்று குறிப்பிட்டார்.

குஜராத் முதல்வர் மேலும் கூறுகையில், அண்டை நாடான பங்களாதேஷில் இந்து மக்கள் தொகை வெறும் 2 சதவீதமாக குறைந்துள்ளது. “சில தசாப்தங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் 2 லட்சம் இந்து மற்றும் சீக்கியவாசிகள் இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை இன்று வெறும் 500 தான். உலகில் உள்ள 150 இஸ்லாமிய நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டுக்கு முஸ்லிம்களுக்கு செல்ல முடியும், ஆனால் இந்துக்களுக்கு ஒரே ஒரு நாடு மட்டுமே உள்ளது, அதுதான் இந்தியா. அவர்கள் திரும்பி வர விரும்பினால் என்ன பிரச்சினை?” என்று ரூபானி கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் இலக்குகளை அடைய முஸ்லிம்களை ‘தூண்டுகின்றன’ என்றும், மத்தியில் பாஜக தலைமையிலான அரசாங்கத்தை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதாகவும் ரூபானி குற்றம் சாட்டினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், பல பாஜக தலைவர்கள் புதிய சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணிகளை நடத்தி வருகின்றனர். புதிய சட்டத்திற்கு ஆதரவாக டிசம்பர் 23 அன்று பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா கொல்கத்தாவில் மாபெரும் பேரணி நடத்தினார். இந்நிலையில் தற்போது இந்த வரிசையில் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி CAA-க்கு ஆதரவாக தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

Trending News