புதுடில்லி: நாட்டின் வடமேற்கு பகுதியை தொடர்ந்து வடகிழக்கு பகுதியல் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை, டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான என்.சி.ஆர் போன்ற பகுதிகளிலும் மழையை பெய்யத் தொடங்கியுள்ளது. அசாம் மற்றும் பீகாரில் வெள்ளத்தால் குறைந்தது 50 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் நேர்ந்ததுள்ளது.
பருவமழை கிட்டத்தட்ட நாடு முழுவதும் பெய்து வருகிறது. பீகார், அசாம் உள்ளிட்ட வடகிழக்கின் பல மாநிலங்களில் பலத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அசாம் மற்றும் பீகாரில் மட்டும் 49-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். திரிபுரா, பீகார், அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களுக்கு பிரச்சினையாகிவிட்டது. பீகாரில் 34 பேரும், அசாமில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அசாமில் மில்லியன் கணக்கான மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். திரிபுராவிலும் இதே நிலைமை தான். அசாமின் காசிரங்கா தேசிய பூங்கா வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதன்மூலம் வனவிலங்குகளும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பீகாரின் வடக்குப் பகுதிகளில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமத்திற்கு வெள்ள நீரை புகுந்துள்ளது. பல கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர். முதலமைச்சர் நிதீஷ்குமார் திங்கள்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானம் மூலம் ஆய்வு நடத்தினார்.
பீகாரில் வெள்ளத்தால் அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் அரேரியா, கிஷன்கஞ்ச், சுபால், தர்பங்கா, சிவார், சீதாமாரி, கிழக்கு சம்பாரன், மதுபானி, முசாபர்பூர், பூர்னியா மற்றும் சஹர்சா மாவட்டங்கள் அடங்கும். உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, மாநிலத்தில் 77 தொகுதிகளில் 546 பஞ்சாயத்துகளில் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மறுபுறம், சென்னையில் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்த மழைக் காரணமாக மக்களின் முகத்தில் சந்தோசம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சென்னை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பகுதி வறட்சியை எதிர்கொண்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.