போலி வைரம் விற்றதா, ஹைதிராபாத்தை சேர்ந்த இருவரை ஹைதிராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!
இவர்களிடம் இருந்து சுமார் 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான போலி வைரங்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றம்சாட்ட பட்வர்களின் பெயர் மோஹட் அதர் சித்திக்(52) மற்றும் மோஹட் சலாம் கான்(39) என அடையளம் காணப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப் பட்ட இருவரும் வைர நகைகளுடன் சேர்த்து போலி வைரங்களையும் சேர்த்து விற்றுள்ளனர்.
ஹைதிராபாத்தை சேர்ந்த தொழிளதிபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக நகர காவல் ஆணையர் வி வி ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்!
விசாரணையில் இவர்களின் வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பினை ஈடுசெய்ய இவர்கள் இருவரும் இணைந்து சுமார் ரூ.3500 -க்கு போலி வைர கற்களை வாங்கி பின்னர் அதனை வைரங்களுடன் சேர்த்து விற்றுள்ளனர்.
இந்த போலி விற்பனையில் இதுவரை ரூ.1.15 கோடி வருமானம் ஈட்டியதாகவும் தெரிவத்தனர்!