100 முறை குளித்தாலும் குமாரசாமி எருமை போல் தான் இருப்பார்: ராஜு கேஜ்

கர்நாடக முதல்வர் குமாரசாமி நூறு தடவை குளித்தாலும் எருமை போலத் தான் இருப்பார் என BJP முன்னாள் MLA ராஜு கேஜ் கூறியுள்ளார்!!

Last Updated : Apr 17, 2019, 02:38 PM IST
100 முறை குளித்தாலும் குமாரசாமி எருமை போல் தான் இருப்பார்: ராஜு கேஜ் title=

கர்நாடக முதல்வர் குமாரசாமி நூறு தடவை குளித்தாலும் எருமை போலத் தான் இருப்பார் என BJP முன்னாள் MLA ராஜு கேஜ் கூறியுள்ளார்!!

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு காடங்களாக நடைபெற்ற இருக்கிறது. இந்நிலையில், தங்களின் ஆட்சியை கைப்பற்ற ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தீவிர பிரட்ச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சில அரசியல் கட்சித்தலைவர்கள் பிரட்ச்சாரத்தில் பேசும் பல கருத்துக்களை சர்ச்சையை ஏற்படுத்தி வரகின்றனர். இந்த சூழ்நிலையில், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நூறு தடவை குளித்தாலும் எருமையை போலத் தான் காட்சியளிப்பார் என பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜு கேஜ் கூறியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

கடந்த வாரம் கர்நாடக முதல்வர் குமாரசாமி நரேந்திர மோடி "makeup" குறித்து பேசியிருந்தார். குமாரசாமி கூறுகையில், கேமரா முன் தோன்றுவதற்கு முன்னர் பிரதமர் நரேந்திரமோடி முக அலங்காரம் செய்து கொள்வதாகவும், ஒரு நாளைக்கு 10 ஆடைகளை மாற்றுவதாகவும் குமாரசாமி விமர்சித்திருந்தார். மேலும், அவர்  காலையில் மக்கள் மற்றும் கேமரா முன் வரும் முன், முகத்தில் ஒரு பிரகாசம் பெற மெழுகு மூலம் ஒப்பனை செய்கிறார். 

ஆனால் நம் வழக்கம், நாம் காலையில் குளித்துவிட்ட பிறகு வெளியே சென்றால், அடுத்த நாள் காலையில் தான் குளிப்போம், முகத்தை கழுவுவோம். எங்கள் முகம் கேமராவில் அழகாக இல்லை, எனவே எங்கள் ஊடக நண்பர்கள் நம் முகங்களை காட்ட விரும்பவில்லை, அவர்கள் நரேந்திர மோடியை மட்டுமே காட்டுகிறார்கள்" என அவர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள கக்வாத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜூ கேஜ், மோடி பார்ப்பதற்கு மிகவும் நன்றாகவும், அழகாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதனால் தான் அவர் முக அலங்காரம் செய்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். அதேவேளையில் குமாரசாமி கருப்பாக உள்ளதாகவும், 100 முறை குளித்தாலும் எருமை போல் தான் இருப்பார் என்றும் ராஜூ கேஜ் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending News