Cyclone Tauktae கரையைக் கடக்கத் தொடங்கியது; எச்சரிக்கையில் குஜராத் 14 பேர் பலி

டக் தே சூறாவளி கரையைக் கடக்கத் தொடங்கியது. அதிகபட்ச எச்சரிக்கை நிலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் வைக்கப்பட்டுள்ளன. புயலின் காரணமாக 14 பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 18, 2021, 09:53 AM IST
  • கரையைக் கடக்கத் தொடங்கியது சூறாவளி டக் தே
  • எச்சரிக்கையில் குஜராத்
  • 14 பேர் பலி
Cyclone Tauktae கரையைக் கடக்கத் தொடங்கியது; எச்சரிக்கையில் குஜராத் 14 பேர் பலி title=

டக் தே சூறாவளி கரையைக் கடக்கத் தொடங்கியது. அதிகபட்ச எச்சரிக்கை நிலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் வைக்கப்பட்டுள்ளன. புயலின் காரணமாக 14 பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ‘டவ் தே’ புயல் காரணமாக, தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி பகுதியையொட்டிய பகுதிகளில் அடைமழை பெய்தது. கேரளா மற்றும் கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்தது.

வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்த புயல் மும்பை கடல் பகுதி வழியாக செவ்வாய்க்கிழமையன்று குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது.

Also Read | Adi Shankaracharya Jayanti : இந்து மதத்தின் மாபெரும் சிற்பி ஆதி சங்கரரின் ஜெயந்தி 

நிலைமையை சமாளிப்பதற்காக, குஜராத் மாநில கடலோரங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பப்ட்டுள்ளனர்.  என்.டி.ஆர்.எஃப் (NDRF) மற்றும் SDRF அணியின் முறையே - 44 மற்றும்10 அணிகள் பேரிடர் நிவாரணப் பணியில் பணியமர்த்தப்பட்டுள்ளன 

மும்பையில் பலத்த மழையை ஏற்படுத்திய டக் தே, தற்போது குஜராத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. குஜராத்தில்  2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பப்ட்டுள்ளனர்.   
திங்கள்கிழமை இரவு டியூ அருகே குஜராத்தின் சவுராஷ்டிரா கடற்கரையில் மணிக்கு 185 கி.மீ வேகத்தில்  சூறாவளிக் காற்று வீசிக் கொண்டு டக் தே புயல் கரையைக் கடந்தது.  

Also Read | தமிழ் பஞ்சாங்கம் 18 மே, 2021: செவ்வாய்க்கிழமை இன்றைய நல்ல நேரம்

சூறாவளி புயல் தொடர்பான தனித்தனி சம்பவங்களில் மகாராஷ்டிராவின் கொங்கன் பிராந்தியத்தில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக் கிழமையன்று இரண்டு படகுகள் கடலில் மூழ்கிய நிலையில், அவற்றில் இருந்த மூவர் காணவில்லை.  

‘டவ் தே’ புயல் காரணமாக கர்நாடகத்தில் 121 கிராமங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. அந்த மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் 8 பேர் உயிரிழந்தனர்.

"புயல் டியூவின் கிழக்கே சவுராஷ்டிரா கடற்கரையைக் கடப்பதால் மிகக் கடுமையான சூறாவளி புயலும், மழையும் பெய்கிறது" என்று அகமதாபாத் இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department) தெரிவித்துள்ளது. 

Also Read | வெள்ளிப் பாத்திரங்களில் வைத்த உணவை கொடுப்பது குழந்தைக்கு  நல்லதா? அறிவியல் சொல்வது என்ன?

மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ள வெப்பமண்டல புயலான ‘டக் தே’ (The tropical storm ‘Tauktae’) குஜராத் கடற்கரையை நெருங்கிவிட்டதாக IMD தெரிவித்துள்ளது.  

நேற்று (மே 17) இரவு போர்பந்தர் மற்றும் மஹுவா இடையே சூறாவளி கரையைக் கடக்கும் என்ற எதிர்பார்ப்பில் குஜராத்தில் தேசிய பேரிடர் நிவாரண படை (NDRF) 44 அணிகளை நிறுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் 10 அணிகள் தவிர, கேரளாவில் ஒன்பது அணிகள், தமிழ்நாட்டில் எட்டு அணிகள், கர்நாடகாவில் மூன்று அணிகள், தமன் & டியூவில் மூன்று அணிகள், தாத்ரா நகர் & ஹவேலியில் ஒரு அணி மற்றும் கோவாவில் ஒரு அணி என முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாந்திரா-ஒர்லி கடல் மேம்பாலம் மூடப்பட்டது. மேலும் மும்பை விமான நிலையமும் பல மணி நேரம் மூடப்பட்டது. எனவே மும்பை நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Also Read | Bizarre Hilarious: 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News