நீரிழிவு நோயால் (diabetic) பாதிக்கப்பட்டுள்ள மாணவ/ மாவியர்கள், தேர்வுக்கு இடையில் ஸ்நாக்ஸ் உட்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது சி.பி.எஸ்.இ.
இது தொடர்பான சி.பி.எஸ்.இ அணைத்து பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்பயுள்ளது.
இனிப்பு மாத்திரைகள், சாக்லேட் மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் தேர்வின் போது எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நடைமுறையை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் பெற, நீரிழிவு மருத்துவரிடம் இருந்து சான்றிதழ் பெற்று, பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டுமென்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.