ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபி தற்போது 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நாளை துவங்குகிறது. இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால் பார்டர் கவாஸ்கர் தொடரை மீண்டும் தன் வசம் வைத்து கொள்ளலாம். அதே நேரத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவிற்கு எதிரான தொடரை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதைத்தாண்டி, இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) பைனல் கனவு தொடர்ந்துவிடும். இதனால் இப்போது இருந்தே 4வது டெஸ்ட் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கம்? அதுவும் இந்த காரணத்திற்காக?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் ரோஹித் சர்மா மீண்டும் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 3 டெஸ்ட்டாக ஓப்பனிங் இறங்கி கே.எல்.ராகுல் 3வது இடத்தில் இறங்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. அணியின் நலனுக்காக அடிலெய்டு மற்றும் பிரிஸ்பேன் டெஸ்டில் ரோஹித் சர்மா மிடில்-ஆர்டரில் விளையாடினார், ஆனால் அது கைகொடுக்கவில்லை. இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை ரோஹித் 42 டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக, 64 இன்னிங்ஸ்களில் 44.01 சராசரியுடன் 2,685 ரன்களை எடுத்துள்ளார்.
ஒருவேளை ரோஹித் ஓப்பனிங் இறங்கினால் சுப்மான் கில்லை அணியில் இருந்து நீக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே என்ன மாதிரியான மாற்றங்களை அணி மேற்கொள்ள உள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய டெஸ்ட் அணியில் நிதிஷ் குமார் ரெட்டி தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். பார்டர்-கவாஸ்கர் டிராபியில் பேட் மற்றும் பந்து என இரண்டிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார். இருப்பினும் அவருக்கு பதில் தனுஷ் கோட்டியனை அணியில் எடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், விராட் கோலி 4-வது இடத்திலும், அவரை தொடர்ந்து ரிஷப் பந்த் 5-வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 6வது இடத்திலும் களமிறங்க உள்ளனர்.
மெல்போர்ன் ஆடுகளம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் 2 சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். ரவீந்திர ஜடேஜாவுக்கு ஜோடியாக வாஷிங்டன் சுந்தர் அல்லது தனுஷ் கோட்டியான் இடம் பெறலாம். மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் இருப்பார்கள். தற்போது இந்த தொடர் 1-1 என்ற நிலையில் இருப்பதால், இரு அணிகளுக்கும் வெற்றி தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா என இரண்டு அணிகளுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்க்கு தகுதி பெற வெற்றி தேவை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ