'நீட்' தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை தான் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான CBSE அறிவுறுத்தியுள்ளது.
ஜேஇஇ (JEE) மெயின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. www.cbseresult.nic.in என்ற இணையத்தளத்தில் முடிவுகளை அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி. ஆகிய மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு, சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்கள் தற்போது 5 பாடங்கள் படித்து வருகிறார்கள். அடுத்த கல்வி ஆண்டு முதல் 6 பாடங்களை படிக்க வேண்டும். அதாவது மொழிப்பாடம்-1, மொழிப்பாடம்-2, அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களோடு கூடுதலாக தொழில்கல்வி பாடம் ஒன்றையும் எடுத்து படிக்க வேண்டும்.
நீரிழிவு நோயால் (diabetic) பாதிக்கப்பட்டுள்ள மாணவ/ மாவியர்கள், தேர்வுக்கு இடையில் ஸ்நாக்ஸ் உட்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது சி.பி.எஸ்.இ.
இது தொடர்பான சி.பி.எஸ்.இ அணைத்து பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்பயுள்ளது.
இனிப்பு மாத்திரைகள், சாக்லேட் மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் தேர்வின் போது எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நடைமுறையை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் பெற, நீரிழிவு மருத்துவரிடம் இருந்து சான்றிதழ் பெற்று, பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டுமென்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.