Weight Loss Tips: உடல் பருமன் பாடாய் படுத்துகிறதா? தொப்பை கொழுப்பு கரைய மறுக்கிறதா? எடை குறைய எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் பலன் இல்லையா? உங்களுக்குதான் இந்த பதிவு.
இந்த நவீன யுகத்தில் பலர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை, ஒரே இடத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்து, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, தொப்பை கொழுப்பு (Belly Fat) வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால், அதை குறைப்பது மிக கடினம். உடல் எடையை குறைக்க பலர் பல வழிகளை பின்பற்றுகிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். எனினும், சில எளிய வழிகளிலும் நாம் உடல் எடையை குறைக்கலாம்.
அப்படி ஒரு எளிய, இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். காலையில் சில சத்தான பானங்களை குடித்து உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
எடை இழப்பில் உதவும் காலை நேர பானங்கள்
சீரக தண்ணீர் (Cumin Water)
நமது சமையலறையில் இருக்கும் சீரகம் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். சீரகம் பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள மசாலா. தினமும் காலையில் சீரகத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடிக்கவும். இதற்கு 1 டீஸ்பூன் சீரகத்தை 1 கப் தண்ணீரில் எடுத்து பாதியாக குறையும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் அதை ஆறவைத்து குடிக்கவும். சீரகத்தில் உள்ள ஆண்டி-ஆக்சிடெண்ட்கள் பண்புகள் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றன. இது கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது.
மேலும் படிக்க | வெல்லத்தில் கலப்படம்... சிம்பிளா கண்டுபிடிக்க டிப்ஸ்..!
எலுமிச்சை மற்றும் தேன் (Lemon Water)
எடை இழப்பு முயற்சியில் உள்ளவர்கள் எலுமிச்சை மற்றும் தேன் கலவையை குடிக்கலாம். இதை தண்ணீருடன் சேர்த்து குடிப்பது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இந்த எடை இழப்பு பானம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றது. இது எடை இழப்பை மிகவும் எளிதாக்குகிறது. இதற்கு, 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 எலுமிச்சையை பிழிந்து, அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இலவங்கப்பட்டை தண்ணீர் (Cinnamon Water)
இலவங்கப்பட்டையில் ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இது எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. இலவங்கப்பட்டை தண்ணீர் உடல் எடையைக் குறைக்கும் சிறந்த பானமாக விளங்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், தினமும் காலையில் 2 அங்குல இலவங்கப்பட்டையை உடைத்து 1 கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதி ஆனதும் வடிகட்டி குடிக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குளிர்காலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொலஸ்ட்ரால்: இவைதான் அறிகுறிகள், ஜாக்கிரதை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ