டெல்லியில் அரசின் புதிய மதுபானக் கொள்கையில் விதிமீறல் நடைபெற்றதாக எழுந்த புகாரில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு, கலால்துறை ஆணையர் கோபிகிருஷ்ணாவின் அலுவலகம் உள்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மணீஷ் சிசோடியா குறிவைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் வெளியாகும் தினசரி நாளிதழில், டெல்லியின் கல்வித்துறை குறித்தும், அத்துறையின் அமைச்சரான மணீஷ் சிசோடியாவை பாராட்டியும் கட்டுரை வெளிவந்துள்ளது.
இதனைக் குறிப்பிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித்தாளின் முதல் பக்கத்தில் டெல்லி மாடல் உள்ளது. சுதந்திர இந்தியாவின் சிறந்த கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா. இதற்குப் பரிசாகவே மத்திய அரசு சிபிஐ-ஐ அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | இப்படிப்பட்ட அரசியல் செய்வதற்கு வெட்கமில்லையா பிரதமரே... ராகுல் காந்தி தாக்கு
Delhi has made India proud. Delhi model is on the front page of the biggest newspaper of US. Manish Sisodia is the best education minister of independent India. pic.twitter.com/6erXmLB2be
— Arvind Kejriwal (@ArvindKejriwal) August 19, 2022
மேலும் படிக்க | பில்கிஸ் பானோ வழக்கு: நாட்டு பெண்களுக்கு என்ன செய்தி சொல்கிறீர்கள்? ராகுல் சாடல்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ