பட்ஜெட் 2023: இன்று நாட்டின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த நிலையில், அனைத்து தரப்பினரும், சாமானியர்களும் பல வித சலுகைகளுக்காக மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஊதியம் பெறும் வகுப்பினருக்கு அரசாங்கம் ஒரு பெரிய பரிசை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பணவீக்கத்திலிருந்து நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் சில வேறுபட்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.
வரி வகைகளில் சலுகை
முக்கியமாக, வரி வகைகளில் பல வித சலுகைகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அதிகபட்ச வருமான வரி சம்பளம் பெறும் வகுப்பினரிடமிருந்தே வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் வரி வரம்பை உயர்த்தி நிதி அமைச்சர் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது தவிர, நிலையான விலக்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2023, அதாவது இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2023க்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2024 ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மோடி அரசாங்கத்தின் இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி முழு பட்ஜெட் இதுவாக இருக்கும். ஆகையால், இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளும் விண்ணைத் தொட்டுள்ளன.
காகிதமற்ற பட்ஜெட்
முந்தைய இரண்டு யூனியன் பட்ஜெட்களைப் போலவே, 2023-24 யூனியன் பட்ஜெட்டும் காகிதமற்ற வடிவத்தில் வழங்கப்படும். வரி செலுத்துவோருக்கு வருமான வரிச் சலுகை கிடைக்குமா? பட்ஜெட் அறிவிப்புகளில் இருந்து வரி விதிப்பில் சில நிவாரணங்களை எதிர்பார்க்கும் வரி செலுத்தும் தனிநபர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.
மேலும் படிக்க | பட்ஜெட்டில் அதிக வார்த்தைகள் பேசியது யார் தெரியுமா...? - சுவாரஸ்ய தகவல்கள்
அவற்றில் சில முக்கிய எதிர்பார்ப்புகள் இதோ
80C இல் விலக்கு
வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், வரி செலுத்துவோர் ரூ. 1.5 லட்சம் தொகையை முதலீடு செய்து வரி விலக்கு பெறலாம். இந்த வரம்பை அதிகரிக்க வேண்டும் என வரி செலுத்துவோர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பட்ஜெட்டில் இந்த விஷயத்தில் அரசு முடிவெடுத்தால், வரி செலுத்துவோருக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும்.
வரி வரம்பு அதிகரிக்கும்
பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிய வரி முறையின் கீழ், வருமான வரி செலுத்துவோருக்கு, ஐந்து லட்சம் ரூபாயாக வருமான வரி விலக்கை அரசு அதிகரிக்கலாம். தற்போது ரூ.2.5 முதல் ரூ.5 லட்சம் வரை வருமானத்துக்கு 5% வரியும், ரூ.5 முதல் 7.5 லட்சம் வருமானத்துக்கு 20% வரியும் செலுத்த வேண்டும்.
நிலையான விலக்கு மாறும்
ஊதியம் பெறும் வகுப்பினர் ஒவ்வொரு ஆண்டும் நிலையான விலக்கு, அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்ஷனின் கின் கீழ் 50,000 ரூபாய் விலக்கு பெறலாம். வருமான வரியின் பிரிவு 16 (IA) இல் அரசாங்கம் மாற்றங்களைச் செய்யக்கூடும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையான விலக்கு வரம்பு ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Budget 2023: இந்த பொருட்களின் விலை அதிகரிக்கலாம்! முன்கூட்டியே வாங்கிடுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ