Breaking: சுமார் 2000 ரூபாய் விலை குறைந்தது Remdesivir தடுப்பூசி, அரசின் அதிரடி முடிவு

கோடிக்கணக்கான COVID-19 நோயாளிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் விதமாக, மத்திய அரசு சனிக்கிழமை (ஏப்ரல் 17, 2021) COVID-19 எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிரின் விலையை ஒரு ஊசிக்கு ரூ .2,000 வரை குறைத்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 18, 2021, 07:55 AM IST
  • கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமெடுத்துள்ளது.
  • அரசின் முயற்சியால் குறைந்தது ரெம்டெசிவிர் மருந்தின் விலை.
  • முன்னதாக, ரெம்டெசிவிரின் ஏற்றுமதியும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.
Breaking: சுமார் 2000 ரூபாய் விலை குறைந்தது Remdesivir தடுப்பூசி, அரசின் அதிரடி முடிவு title=

புது டெல்லி: கோடிக்கணக்கான COVID-19 நோயாளிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் விதமாக, மத்திய அரசு சனிக்கிழமை (ஏப்ரல் 17, 2021) COVID-19 எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிரின் விலையை ஒரு ஊசிக்கு ரூ .2,000 வரை குறைத்தது.

சனிக்கிழமையன்று ஒரு செய்திக்குறிப்பில், ரசாயன உரங்கள் அமைச்சகம் மற்றும் மருந்துத் துறையின் ஆலோசகர் டாக்டர் வினோத் கோட்வால் திருத்தப்பட்ட விலைகளுடன் புதிய பட்டியலை வெளியிட்டார்.

வைரஸ் தடுப்பு மருந்தான ரெம்டெசிவிரை (Remdesivir) இப்போது ரூ .899 க்கும் வாங்கலாம். 

Remdesivir, coronavirus

ALSO READ: Remdesivir உற்பத்தி அதிகரிக்கும், விலையும் குறையும்: அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்புகள்

திருத்தப்பட்ட விலை விவரங்கள் பின்வருமாறு:

1. காடிலா ஹெல்த்கேர் லிமிடெட் REMDAC: 2,800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைந்தது
2. சின்ஜீன் இன்டர்நேஷனல் லிமிடெட் (பயோகான் பயோலாஜிக்ஸ் இந்தியா) ரெம்வின்: 3,950 ரூபாயிலிருந்து 2,450 ரூபாயாக குறைந்தது
3. டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் REDYX: 5,400 ரூபாயிலிருந்து 2,700 ரூபாயாக குறைந்தது. 
4. சிப்லா லிமிடெட் CIPREMI: 4,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக குறைந்தது. 
5. மைலன் பார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் DESREM : 4,800 ரூபாயிலிருந்து முதல் 3,400 ரூபாயாக குறைந்தது. 
6. ஜூபிலண்ட் ஜெனரிக்ஸ் லிமிடெட் JUBI-R : 4,700  ரூபாயிலிருந்து 3,400 ரூபாயாக இருந்தது. 
7. ஹெட்டெரோ ஹெல்த்கேர் லிமிடெட் COVIFOR: 5,400 ரூபாயிலிருந்து 3,490 ரூபாயாக குறைந்தது. 

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் இந்தியா போராடிக்கொண்டிருக்கும் வேளையில், தடுப்பூசி ஊசிகளுக்கான தட்டுப்பாட்டுக்கு மத்தியில், தடுப்பூசி  தயாரிப்பாளர்கள் விலையை குறைத்துள்ளனர். முன்னதாக, தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் இந்திய அரசு (Indian Government) பேச்சுவார்த்தை நடத்தி, உற்பத்தியை அதிகரிக்கும்படியும், ரெம்டெசிவிர் விலையை குறைக்கும்படியும் கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து ரெடெசிவிர் தடுப்பூசியின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரசின் (Coronavirus) இரண்டாவது நிலை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிரின் தேவை அதிகரித்துள்ளது. ஏப்ரல் 11 ம் தேதி அரசு ரெம்டேசிவிரை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது.

"மேற்கூறியவற்றின் அடிப்படையில், நிலைமை மேம்படும் வரை ரெம்ட்சிவிர் ஊசி மற்றும் ரெம்டெசிவிர் ஆக்டிவ் மருந்து பொருட்களை (API) ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்துள்ளது" என்று சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏழு இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட கிலியட் சயின்ஸில் இருந்து இந்த மருந்துக்கு உரிமம் பெற்றுள்ளன.

ALSO READ: கொரோனா நிலைமை மேம்படும் வரை Remdesivir ஊசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான 

செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News