லடாக் ராணுவ வாகன விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு! விபத்துக்கு காரணம் இதுதான்

Army Men Killed In Accident: லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், ஒருவர் உயிருக்கு போராடிவருகிறார்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 20, 2023, 06:05 AM IST
  • லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்த விபத்து
  • விபத்தில் 9 ராணுவ வீரர்கள் பலி
  • விபத்துக்கு காரணம் என்ன?
லடாக் ராணுவ வாகன விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு! விபத்துக்கு காரணம் இதுதான் title=

புதுடெல்லி: லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்ததால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் வீரமரணம் அடைந்த செய்தி வெளியாகி உள்ளது. அத்துடன் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதை லடாக் பாதுகாப்பு அதிகாரியே உறுதி செய்துள்ளார். லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை ஒரு வாகனம் சாலையில் இருந்து விலகி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.

இந்த பயங்கர விபத்தில் 9 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும், இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்ததாகவும் செய்திகள் கூறுகின்றனர். தெற்கு லடாக்கின் நியோமாவின் கேரே என்ற இடத்தில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்

இந்த விபத்து குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, லடாக்கின் லே அருகே நடந்த விபத்தில் ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தது வருத்தமளிப்பதாக ட்வீட் செய்துள்ளார். அவர் நம் நாட்டுக்காக ஆற்றிய சேவையை என்றும் மறக்க மாட்டோம். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்த இராணுவ வீரர்கள் கள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன், என்று அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும்போது காத்திருக்கும் பெரிய சிக்கல்!

காரு காரிசனில் இருந்து லே அருகே உள்ள கியாரியை நோக்கி வீரர்கள் சென்று கொண்டிருந்தனர்

கியாரிக்கு 7 கிலோமீட்டர் முன்னதாக இராணுவ வாகனம் சென்றுக் கொண்டிருந்தபோது, மாலை 5.45 மணியளவில் இராணுவ வாகனம் வழுக்கி பள்ளத்தாக்கில் பள்ளத்தில் விழுந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, ராணுவ வாகனம் கரு கேரிசனில் இருந்து லே அருகே கியாரி நோக்கி சென்று கொண்டிருந்தது. வீரமரணம் அடைந்த 9 ராணுவ வீரர்களில் 2 ஜேசிஓக்கள் மற்றும் 7 ராணுவ வீரர்கள் அடங்குவர். இந்த வாகனத்தில் மொத்தம் 10 ராணுவ வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. வாகன ஓட்டியின் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இந்த கோர விபத்து நடைபெற்றதாக  ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | மாதம் ரூ.210 முதலீடு செய்தால் போதும், ரூ.60,000 ஓய்வூதியம் பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News