உடல் எடையை குறைக்க கிரீன் டீ: தற்போது உடல் எடையை பராமரிப்பது பெரிய சவாலாக உள்ளது. இன்றைய காலகட்டத்தின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், பெரும்பாலானோர் உடல் எடையை அதிகரித்து வருகின்றனர். அதேபோல் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் பருமன் பிரச்னையும் ஏற்படுகிறது. கோடிக்கணக்கான மக்கள் உடல் பருமன் மற்றும் அதிக எடை பிரச்சனையால் போராடி வருகின்றனர். உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு வழிகளை பின்பற்றி வருகின்றனர். அதிக எண்ணிக்கையிலான மக்கள் எடை இழப்புக்கு கிரீன் டீ குடிக்க விரும்புகிறார்கள். இதனால் கிரீன் டீயின் போக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. உடல் எடையை குறைக்க இது ஒரு வரப்பிரசாதம் என்று அனைவரும் கருதுகின்றனர். ஆனால் கிரீன் டீ குடித்தால் உடல் எடையை குறைக்க முடியுமா என்பதை இன்று நாம் காண உள்ளோம். இதனுடன், தினமும் எத்தனை கப் கிரீன் டீ குடிக்க வேண்டும் என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
மெடிக்கல் நியூஸ் டுடேயின் அறிக்கையின்படி, நமது உடல் உடலின் ஆற்றலுக்காக உணவு மற்றும் பானத்தை மாற்றும் போது, இந்த செயல்முறை வளர்சிதை மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. வளர்சிதை மாற்றத்தை திறம்பட செய்வதன் மூலம் எடையைக் குறைக்க கிரீன் டீ உதவியாக இருக்கும். கிரீன் டீயில் காஃபின் மற்றும் கேட்டசின் எனப்படும் ஒரு வகை ஃபிளாவனாய்டு உள்ளது, இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும்.
மேலும் படிக்க | பற்களில் மஞ்சள் கறைகள் அதிகம் உள்ளதா? இந்த முறையில் எளிதாக நீக்கலாம்!
ஆராய்ச்சியின் படி, இந்த இரண்டு சேர்மங்களும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். கேடசின்கள் கூடுதல் கொழுப்பை உடைக்க உதவும், அதே சமயம் கேட்டசின்கள் மற்றும் காஃபின் இரண்டும் உடல் பயன்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கலாம். 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு மதிப்பாய்வில் கேட்டசின்கள் அல்லது காஃபின் கொண்ட கிரீன் டீ எடையைக் குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டது.
தினமும் எத்தனை கப் கிரீன் டீ குடிப்பது நன்மை பயக்கும்?
தினமும் எத்தனை கப் கிரீன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்ற கேள்வி தற்போது மக்களிடையே எழுகிறது. ஆராய்ச்சியின் படி, ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் சூடான கிரீன் டீ எடை இழப்புக்கு போதுமானதாக கருதப்படுகிறது. அதன் சரியான அளவு நபருக்கு நபர் வித்தியாசமாக இருக்கலாம். நீங்கள் தினமும் எவ்வளவு காஃபின் உட்கொள்கிறீர்கள் மற்றும் உடலின் வளர்சிதை மாற்றம் எவ்வாறு உள்ளது என்பதைப் பொறுத்தது. கிரீன் டீயில் பல வகைகள் உள்ளன, ஆனால் அனைத்தும் எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். குறைந்த பதப்படுத்தப்பட்ட கிரீன் டீ அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. எனவே இத்தனை நன்மைகளை கொண்ட கிரீன் டீ இதய நோய் மற்றும் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம், இதனால் கிரீன் டீயைக் குடிப்பதற்கு முன்பு மருத்துவரை அணுகவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொசு விரட்டிகளால் மரணம் ஏற்படுவது ஏன்? தெரிந்து கொள்ளுங்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ