உடல் பருமனால் பிரச்சனையா? வெந்நீரை இப்படி குடிச்சா 5 நாளில் பலன் தெரியும்

Weight Loss Tips: உடல் பருமன் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீரிழிவு, இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மற்றும் தைராய்டு போன்ற நோய்களுக்கு உடல் பருமன் காரணமாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 17, 2023, 07:33 PM IST
  • வெந்நீர் குடிப்பது உடல் கொழுப்பை குறைப்பதோடு இன்னும் பல உடல் ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
  • வெந்நீர் அருந்துவதற்கான சரியான முறையை அறிந்து கொள்வது அவசியமகும்.
  • வெதுவெதுப்பான நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
உடல் பருமனால் பிரச்சனையா? வெந்நீரை இப்படி குடிச்சா 5 நாளில் பலன் தெரியும் title=

எடை இழப்புக்கான உணவு: உடல் பருமன் ஒரு நோயாக மாறி வருகிறது. உடல் பருமனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிகை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் உடல் பருமனால் மக்கள் பல வித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். உடல் பருமன் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீரிழிவு, இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மற்றும் தைராய்டு போன்ற நோய்களுக்கு உடல் பருமன் காரணமாகும். உடல் பருமனை கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு வகையான முயற்சிகளை எடுக்கின்றனர். 

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பலர் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். மக்கள் உடல் பருமனை குறைக்க பல்வேறு வழிகளையும் பின்பற்றி வருகின்றனர். சிலர் கொழுப்பை எரிக்க வெந்நீர் குடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் வெந்நீர் குடிப்பது உண்மையில் உடல் கொழுப்பைக் குறைக்குமா? 

வெந்நீர் குடிப்பது உடல் கொழுப்பை குறைப்பதோடு இன்னும் பல உடல் ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால், வெந்நீர் அருந்துவதற்கான சரியான முறையை அறிந்து கொள்வது அவசியமகும். வெதுவெதுப்பான நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது உண்மைதான். இது உடலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். வெந்நீரைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் உள்ள கொழுப்பும் குறையத் தொடங்குகிறது. 

ஆனால் வெந்நீர் குடிப்பதில் உள்ள மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், நாம் எப்படி வெந்நீரைக் குடிக்க வேண்டும் என்பதுதான். வெந்நீரைக் குடிப்பதற்கான சரியான வழியையும் அதன் நன்மைகளையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | Hair loss treatment: வழுக்கை தலையில் முடி வளர பாட்டி வைத்தியம் 

கொழுப்பை எரிக்க சூடான தண்ணீர் குடிக்கவும்

உடல் எடையை குறைக்க வெந்நீர் குடிப்பது மிகவும் அவசியம். ஆனால், வெந்நீரை நேரடியாகக் குடித்தால் அது சரியல்ல என்பது மிகப்பெரிய விஷயம். அதனால் தான் உடல் எடையை குறைப்பதற்காக வெந்நீரை குடிக்கும் போதெல்லாம், அதில் சிறிது தேன் கலந்து குடித்தால், அதிக பலன் கிடைக்கும். இதனால் தொப்பை விரைவில் குறையும்.

தேன் மற்றும் வெந்நீர் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் பி6, அமினோ அமிலங்கள், கார்போஹைட்ரேட், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் ஆகியவை உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இதன் காரணமாக, எடை வேகமாக குறைகிறது.

நச்சு நீக்கம்

தேனும், வெந்நீரும் சேர்ந்து நல்ல முறையில் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். வழக்கமான வெந்நீரில் தேன் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். இது கொழுப்பு கல்லீரல் பிரச்சனையையும் முடிவுக்குக் கொண்டுவருகிறது.

வளர்சிதை மாற்றம்

வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால், வளர்சிதை மாற்றம் பலப்படுகிறது. இதனால் உணவு எளிதில் ஜீரணமாகி வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எச்சரிக்கை... கரும்பு சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் நெஞ்சு வலி வருமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News