சரும ஆரோக்கியம்: சருமம் என்றென்றும் இளமையாக இருக்க அதனை நன்றாக பராமரிப்பது அவசியம். குளிர்காலம் நெருங்குவதால், கூடுதல் பராமரிப்பு தேவை. ஏனெனில், குளிர்காலத்தில், சருமம் அதன் பளபளப்பு மற்றும் ஈரப்பதத்தை இழக்கிறது, இதன் காரணமாக முகம் வறண்டு மற்றும் உயிரற்றதாக காட்சியளிக்கும். சரும வறட்சியை போக்க, மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். இருப்பினும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் சருமத்தை இளமையாகவும், ஈரப்பதம் இருக்கும் வகையிலும் பராமரிக்கலாம்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடலாம். இதன் மூலம் உங்கள் பளபளப்பு மற்றும் ஈரப்பதம் உங்கள் முகத்தில் நீங்கமால் இருக்கும்.
வாழைப்பழ ஃபேஸ் பேக்
உங்கள் சருமம் வறண்டதாக இருந்தால் வாழைப்பழ ஃபேஸ் பேக் போடலாம். வாழைப்பழத்தை மசித்து அதில் பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவினால் போதும். இதன் மூலம், சருமத்தின் இறுக்கம் மற்றும் வழுவழுப்பு இரண்டும் நீங்காமல் அப்படியே இருக்கும்.
கடுகு எண்ணெய்
உங்கள் சருமம் மிகவும் வறண்டதாக இருந்தால், கடுகு எண்ணெய் கை கொடுக்கும். இதனை சிறிது சூடாக்கி, பின் ஆற வைத்து பயன்படுத்தினால், அதில் இருக்கும் தனிப்பட்ட வாசனை நீங்கி விடும். கடுகு எண்ணெய் உடலுக்கு சிறிது கதகதப்பை கொடுக்கக் கூடியது என்பதால், குளிர்காலத்திற்கு ஏற்ற எண்ணெயாக இருக்கும்.
தேன் மற்றும் முட்டை
தேன் மற்றும் முட்டை சருமத்திற்கு சரியான ஈரப்பதத்தை அளிக்கிறது. இந்த இரண்டையும் கலந்து தயாரிக்கப்பட்ட கலவையை பூசி, 10 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்யவும்.
ஓட்ஸ் மற்றும் பால்
சிறிது ஓட்ஸ் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்யவும். முகத்தில் தடவி, சில நிமிடங்களுக்குப் பிறகு சுத்தமான தண்ணீரில் முகத்தை சுத்தம் செய்யவும். இது உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, மேலும் பளபளப்பாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
மேலும் படிக்க | முட்டை தலைக்கு தேய்த்தால் பெண்கள் முடி நீளமாக வளருமா?
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் வறண்ட மற்றும் உயிரற்ற சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதை பயன்படுத்துவதால் சருமம் இளைமையாக காட்சி அளிக்கும்.
வெள்ளரி
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது, இதை சாறு எடுத்து முகத்தில் தடவலாம். இது உங்கள் முகத்தின் ஈரப்பதத்தை பராமரிக்கும்.
அலோ வேரா
அலோ வேரா ஜெல் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இது சருமத்தில் முகப்பரு மற்றும் சுருக்கங்களை போக்குகிறது, இது உங்கள் சருமத்தை இறுக்கமாகவும் இளைமையாகவும் வைத்திருக்கும்.
பால்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் லாக்டிக் அமிலம் நிறைந்த பச்சை பாலில் பப்பாளி, தேன், பாதாம், மஞ்சள் கலந்து முகத்தில் தடவவும். இது உங்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதோடு, உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றவும் உதவும்.
தண்ணீர்
உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். இது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது, பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 1.6 லிட்டர் தண்ணீரையும், ஆண்கள் சுமார் 2 லிட்டர் தண்ணீரையும் குடிக்க வேண்டும்.
மேலும் படிக்க | குளிர் காலத்தில் சுடு தண்ணீரில் குளிக்க கூடாது!! ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ